www.garudabazaar.com

“எனக்கு யாரும் எதிரி இல்ல.. பா.ரஞ்சித் நண்பர்தான்..!” - பகாசூரன் படவிழாவில் உடைத்த மோகன்.G

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மோகன்.G இயக்கத்தில் செல்வராகவன், நட்டி நட்ராஜ் இணைந்து  நடிக்கும் திரைப்படம் பகாசூரன். பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற போன்ற படங்களின்  இயக்குனர் மோகன்.G, ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம்  "பகாசூரன்" படத்தை இயக்கி முடித்துள்ளார்.

im Pa.Ranjith facebook friend Mohan G in Bakasuran press meet

Images are subject to © copyright to their respective owners.

Also Read | “இவரை எப்படி ஆடவெப்பாங்க?”.. “இந்த பூனையும் பால் குடிக்குமா?”.. செல்வராகவன் பற்றி கூல் சுரேஷ்

இயக்குனர் செல்வராகவன், நட்டி ஆகியோருடன் ராதாரவி, K.ராஜன், ராம்ஸ், சரவண சுப்பையா, தேவதர்ஷினி சசி லையா  ஆகியோர் நடித்துள்ளனர். கதாநாயகியாக தாராக்ஷி நடித்துள்ளார்.

சாம் C.S. இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பழைய வண்ணாரப்பேட்டை , ருத்ர தாண்டவம் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பாரூக், இந்த படத்திற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர்கள் & முன்னோட்டம் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று உள்ளது. இந்த படத்தின் ஒட்டுமொத்த தமிழக ரிலீஸ் உரிமத்தை பிரபல வினியோகஸ்தர் SSN Production சுப்பையா கைப்பற்றியுள்ளார்.

இதில் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த இயக்குநர் மோகன்.ஜி, “இந்த நிகழ்வில் பேசிய இயக்குனர் மோகன்.ஜி நான் சினிமாவில் இந்த ஐடியாலஜியை எதிர்த்து பண்ண வேண்டும், அந்த ஐடியாலஜியை எதிர்த்து திரைப்படம் பண்ண வேண்டும் என்றெல்லாம் கருதிக் கொண்டு சினிமாவிற்கு வரவில்லை, அவற்றை நல்லதா கெட்டதா என்று நான் பார்க்கவில்லை, அவற்றை அனைத்துமே நான் சினிமாவாகதான் பார்க்கிறேன்.

im Pa.Ranjith facebook friend Mohan G in Bakasuran press meet

நான் பார்த்த விஷயங்களை களப்பணி செய்து ஆய்வுக்கு உட்படுத்தி நான் சினிமாவாக எடுக்கிறேன். அது ஏதோ ஒரு வகையில் பட்டியலின மக்களுக்கான படமாகவோ ஓபிசிக்கனா படமாகவோ சொல்லப்படுகிறது. ஆனால் அது அப்படி அமைந்தது தான். நான் ரஞ்சித் அவர்களுக்கு முன்பு பேஸ்புக்கில் நண்பர்தான். இன்றும் அவருடைய திரைப்படங்கள் எனக்கு பிடித்திருந்தால் ட்விட்டரில் அவற்றை பாராட்டுகிறேன். சினிமாவில் எனக்கு எதிரியும் யாரும் கிடையாது, நண்பரும் யாரும் கிடையாது. இந்த திரைப்படத்தில் இப்போது நடிப்பவர்கள் என்னுடைய நண்பர்கள். சினிமாவை கையில் எடுத்துக் கொண்டு வேற மாதிரி கொண்டு செல்ல வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு இல்லை.

அதே சமயம் இந்த மாதிரி கதைகளைத்தான் நான் தொடர்ந்து பண்ணுவேன், ஏனென்றால் சினிமா ஆகட்டும் சமூகமாகட்டும் ஒரு சமநிலை என்பது வேண்டும். அந்த சமநிலை எப்போது இல்லையோ, அப்போது தப்பான விஷயமாக மாறிவிடும். இன்றைய சூழலில் இரண்டு விதமான கருத்துக்களும் திரைப்படங்களாக வருகின்றன. வலதுசாரிகளும் இடதுசாரிகளும் நடுநிலை என்றும் பல திரைப்படங்கள் வருகின்றன. வெற்றிமாறன் சார் சொன்ன ஒரு விஷயம் மிகப்பெரிய பேசுபொருளாகி இருக்கிறது. இயக்குனர்களுக்கு பொறுப்பு இருக்கிறது. நானும் அதை உணர்கிறேன். இதன் பிறகு வரக்கூடிய படங்களில் எனது பொறுப்புணர்வு அதிகமாகும். செல்வா சார் மாதிரி, நட்டி சார் மாதிரி ஜாம்பவான்களுடன் பணி புரிகிறேன் எனும் பொழுது இன்னும் நிறைய பொறுப்புணர்வுடனே பணிபுரிகிறேன். இதற்கு முன்பாக விளையாட்டாக படம் பண்ணி இருக்கிறேன். இனி இந்த மக்களுக்கு தேவையான படங்கள் சமூகத்தில் மாற்றத்தை உண்டு பண்ண கூடிய படங்கள் நிச்சயமாக பண்ணுவேன். அதில் எந்த மாற்றமும் இல்லை” என பேசியுள்ளார்.

Also Read | “நான் சொன்னா திட்டுவாங்க.. அதே வெற்றிமாறன் Sir சொன்னா..” - இயக்குநர் மோகன்.G பரபரப்பு பேச்சு..

“எனக்கு யாரும் எதிரி இல்ல.. பா.ரஞ்சித் நண்பர்தான்..!” - பகாசூரன் படவிழாவில் உடைத்த மோகன்.G வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

im Pa.Ranjith facebook friend Mohan G in Bakasuran press meet

People looking for online information on Bakasuran, Selvaraghavan will find this news story useful.