www.garudabazaar.com

இந்தியில் உருவாகும் சூப்பர் ஹிட் அடித்த 'LOVE TODAY'.. செம்ம அறிவிப்பு! முழு விவரம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'லவ் டுடே' படத்தின் இந்தி ரீமேக் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Love Today Hindi Remake Rights Bagged by Phantom Studios

Images are subject to © copyright to their respective owners.

Also Read | தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்'.. படத்தின் அடுத்த சரவெடியான #BREAKING அப்டேட்..!

'கோமாளி' படத்தை இயக்கிய இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், 'லவ் டுடே' படத்தை இயக்கி கதாநாயகனாக நடித்திருந்தார். 

இந்த படத்தில் நடிகர் சத்யராஜ் முக்கிய வேடத்தில்  நடித்திருந்தார். 'நாச்சியார்' படத்தில் நடித்த இவானா 'லவ் டுடே' படத்தின் நாயகியாகவும், ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்தனர்.

Love Today Hindi Remake Rights Bagged by Phantom Studios

Images are subject to © copyright to their respective owners.

ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இந்த படம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் கடந்த ஆண்டு நவம்பர் 4, 2022 ஆம் தேதி வெளியானது.

இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் திரையரங்குகளில் வெற்றி பெற்றது. சமீபத்தில் இந்த திரைப்படத்தின் 100 வது நாள் வெற்றி விழா கொண்டாடப்பட்டது.

Love Today Hindi Remake Rights Bagged by Phantom Studios

Images are subject to © copyright to their respective owners.

கடந்த நவம்பரில் தெலுங்கிலும் இந்த படம் வெளியானது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் சிலம்பரசன் ஆகியோரும் இந்த படத்தினை பாராட்டி இருந்தனர். இந்த படம் தற்போது பிரபல நெட்பிளிக்ஸ் ஓடிடியில் கடந்த  ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Love Today Hindi Remake Rights Bagged by Phantom Studios

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில், லவ் டுடே படத்தின் இந்தி ரீமேக் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தி சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான Phantom Studios நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த இந்தி ரீமேக்கில் ஏஜிஎஸ் நிறுவனமும் இணைந்துள்ளது. விரைவில் லவ் டுடே படத்தின் இந்தி ரீமேக் படக்குழுவினர் விபரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read | LEO படத்தின் காஷ்மீர் ஷூட்டிங்.. தீயாய் பரவும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்! TRENDING

தொடர்புடைய இணைப்புகள்

Love Today Hindi Remake Rights Bagged by Phantom Studios

People looking for online information on Love today, Love Today Hindi Remake, Phantom Studios will find this news story useful.