பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் புதிய திரைப்படத்தில் நடிக்க பாலிவுட்டின் முன்னணி ஹீரோ ரன்வீர் சிங் ஒப்பந்தமாகியுள்ளார்.

அறிமுக எழுத்தாளர், இயக்குநரான திவ்யாங் தக்கர் இயக்கத்தில் உருவாகவிருக்கும் பொழுதுபோக்கான கதையில் ரன்வீர் சிங் நடிக்கவிருக்கிறார். 'ஜெயேஷ்பாய் ஜோர்தார்’ என்ற இப்படத்தில் ஒரு குஜராத்தி இளைஞராக ரன்வீர் சிங் நடிக்கிறார். யஷ் ராஜ் பிலிம்ஸ் சார்பில் மணீஷ் சர்மா தயாரிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் வரும் அக்டோபர் மாதம் முதல் துவங்கவுள்ளது.
இதுவரை பாலிவுட்டின் பிரபலமான இயக்குநர்களான சஞ்சய் லீலா பன்சாலி, ரோஹித் ஷெட்டி, கரண் ஜோஹர், கபீர் கான், ஜோயா அக்தர், உள்ளிட்டோருடன் பணியாற்றியுள்ள ரன்வீர் தற்போது அறிமுக இயக்குநரின் படத்தில் நடிக்கவிருக்கிறார். சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவரான ரன்வீர், ‘பத்மாவத்’, ‘கல்லி பாய்’ உள்ளிட்ட திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
தற்போது பிரபல கிரிக்கெட் வீரர் கபில் தேவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான ‘83’ படத்தின் ஷூட்டிங்கில் ரன்வீர் சிங் பிசியாக இருக்கிறார். இந்த படத்தின் ரிலீசுக்கு பின், திவ்யாங் தக்கர் இயக்கவிருக்கும் ‘ஜெயேஷ்பாய் ஜொர்தார்’ படம் ரிலீசாகும். நல்ல கதையும், கருத்தும் கொண்ட இப்படம் சினிமா பிரியர்களுக்கும், எனது ரசிகர்களுக்கும் கண்டிப்பாக பிடிக்கும் என ரன்வீர் தெரிவித்துள்ளார்.
இப்படத்தின் கதையும், ரசிகர்களை திருப்திப்படுத்தும் பொழுதுபோக்கு அம்சமும் இயக்குநர் திவ்யாங் தக்கரின் கதையில் இருக்கிறது. இந்த படத்தில் ரன்வீர் நாயகனாக நடிப்பது கூடுதல் ஆர்வத்தை தூண்டுகிறது என தயாரிப்பாளர் மணீஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
.@RanveerOfficial in and as #JayeshbhaiJordaar
Directed by #DivyangThakkar and produced by #ManeeshSharma #YRFAnnouncement | @JJ_TheFilm pic.twitter.com/uifhAehyjv
— Yash Raj Films (@yrf) May 27, 2019