பயாஸ்கோப் ஃபிலிம் ஃபிரேம்ஸ் பேனரின் கீழ் பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்த ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (மே.19) நடைபெற்றது.
![Bollywood actor Aamir Khan wishes Parthiban and his Otha Seruppu Size 7 team Bollywood actor Aamir Khan wishes Parthiban and his Otha Seruppu Size 7 team](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/bollywood-actor-aamir-khan-wishes-parthiban-and-his-otha-seruppu-size-7-team-news-1.jpg)
நடிகர் பார்த்திபனே முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஆர்.சுதர்ஷன் படத்தொகுப்பும், ரசூல் பூக்குட்டி ஒலிப்பதிவும் செய்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், நடிகர் கமல்ஹாசன், இயக்குநர்கள் ஷங்கர், லிங்குசாமி, கே.பாக்யராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக் கொண்டு பார்த்திபனுக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.
இதையடுத்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் வீடியோ வாயிலாக தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார். அவரைத் தொடர்ந்து, பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான், பார்த்திபன் இயக்கி, நடித்திருக்கும் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ திரைப்படத்திற்கும், படக்குழுவினருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், ‘ஹாய் பார்த்திபன்.. உங்களுக்கும், ஒத்த செருப்பு பட குழுவினருக்கும் வாழ்த்துக்கள். ஒரே ஒரு கதாபாத்திரத்தை வைத்து உருவான படம் என என்னிடம் கூறினீர்கள், இதுவரை இல்லாத புதிய விஷயமாக தெரிகிறது. ஆவலாக இருக்கிறது. இப்படம் ரசிகர்களின் அன்பையும், ஆதரவையும் பெற்று பெரிய வெற்றி அடைய வேண்டும் என வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’ என கூறியுள்ளார்.
நடிகரை மீறி நான் நேசிக்கும் சமூக பொறுப்பணர்வு உள்ள ஒரு கலைஞன் வாழ்த்தும்... pic.twitter.com/JKYDrRtNr8
— R.Parthiban (@rparthiepan) May 20, 2019