சிக்ஸர் ! - இந்த ஸ்போர்ட்ஸ் படத்தின் மூலம் தமிழிலும் என்ட்ரி கொடுக்கும் பாலிவுட் ஹீரோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 1983 ஆம் ஆண்டு முதன் முதலாக உலக கோப்பை வென்றது. இந்த வரலாற்று நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு, '83' என்ற பெயரில் ஒரு  திரைப்படம் தயாராகிவருகிறது.

Ranveer Singh and Jiiva's 83 the film release on April 10, 2020

இந்த படத்தை 'பஜ்ரங்கி பைஜான்', 'ஏக் தா டைகர்' படங்களின் இயக்குநர் கபீர் கான் இயக்க, ரிலையன்ஸ் எண்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் கபில் தேவ் வேடத்தில் ரன்வீர் சிங் நடிக்க, நடிகர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வேடத்தில் தமிழ் நடிகர் ஜீவா நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகவுள்ள இந்த படம்  வருகிற 2020 ஆம் ஆண்டு, ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.  இந்த படம்  தமிழிலும் உருவாகவுள்ளதாக கூறப்படுவதால் ரன்வீர் சிங் நடிக்கும் நேரடித்  தமிழ்படம் என இதனை கூறலாம்.