தமிழில் சூர்யா - ஹரி கூட்டணியில் உருவான 'சிங்கம்' படத்தை அதே பெயரில் ஹிந்தியில் இயக்குநர் ரோஹித் ஷெட்டி ரீமேக் செய்தார். அஜய் தேவ்கன் நடித்த அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகம் 'சிங்கம் ரிட்டர்ன்ஸ்' வெளியானது.

பின்னர் தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் போலீஸாக நடித்த 'டெம்பர்' என்ற படத்தை ஹிந்தியில் 'சிம்பா' என்ற பெயரில் ரீமேக் செய்தார். ரன்வீர் சிங் இயக்கிய அந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது அக்ஷய்குமாரை கதாநாயகனாக வைத்து மீண்டும் ஒரு போலீஸ் ஸ்டோரியை ரோஹித் ஷெட்டி கையில் எடுத்துள்ளார். 'சூர்யவன்ஷி' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் நடிகை கேத்ரீனா கைஃப், அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இந்த படத்தை ரோஹித் ஷெட்டி பிக்சர்ஸ், தர்மா புரொடக்ஷன் மற்றும் கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்நிலையில் நடிகர்கள் அஜய் தேவ்கனும், அக்ஷய் குமாரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருநந்தனர்.
அதில், அஜய் தேவ்கன் 'சிங்கம்' மற்றும் 'சிங்கம் ரிட்டர்ன்ஸ்' படங்களின் கிளாப் போர்டை கையில் வைத்துள்ளார். ரன்வீர் சிங், 'சிம்பா' படத்தின் கிளாப் போர்டையும், அக்ஷய் குமார் 'சூர்யவன்சி' படத்தின் கிளாப் போர்டையும் கையில் வைத்து உள்ளனர். அவர்களுக்கு பின்புறம் இயக்குநர் ரோஹித் ஷெட்டி மற்றும் கரண் ஜோகர் நிற்கின்றனர்.
'இந்த உலகம் பெரிதாகிறது. எங்கள் ஆட்டம் தொடர்கிறது' என அஜய் தேவ்கனும், 'போலீஸ் உலகம் பெரிதாகிறது. 'சூர்யவன்சி' தனது பணியை கையிலெடுக்கிறார்' என அக்ஷய் குமாரும் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
The cop universe just got bigger as #Sooryavanshi takes charge!
— Akshay Kumar (@akshaykumar) May 6, 2019
@ajaydevgn @RanveerOfficial #RohitShetty @karanjohar #KatrinaKaif #KareenaKapoor #SaraAliKhan @RSPicturez @RelianceEnt @DharmaMovies #CapeOfGoodFilms pic.twitter.com/DjUvulZYAw