இந்திய கிரிக்கெட் அணி கடந்த 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்று வரலாற்று சாதனையை நிகழ்த்தியது. இந்த வரலாற்று நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு 83 என்கிற பெயரில் ஒரு திரைப்படம் உருவாகிறது.

இந்தத் திரைப்படத்தை பிரபல பாலிவுட் இயக்குநர் கபீர் கான் இயக்க, ரிலையன்ஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் அப்போதைய கேப்டன் கபில்தேவ் வேடத்தில் ரன்வீர்சிங் நடிக்க, கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவா நடிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெறவிருக்கிறது. அதற்காக படக்குழுவினர் லண்டன் விரைகிறார்கள். அதற்கு முன் படத்தில் பங்குபெறும் நடிகர்கள் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். அவை சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலானது.
அதில் எதிலுமே நடிகர் ஜீவா இல்லை. இதுகுறித்து ரசிகர் ஒருவர் ட்விட்டரில் நடிகர் ஜீவாவிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஜீவா, ''விட்டுட்டு போய்ட்டாங்க பா'' என்றார்.
Vittutu poitannga ba! https://t.co/Dfy9bTcyzQ
— Jiiva (@Actorjiiva) May 29, 2019