சுதந்திர போராட்ட வீரரின் பயோபிக்கை கையில் எடுக்கும் பா.ரஞ்சித்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கவிருக்கும் பாலிவுட் திரைப்படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

Pa.Ranjith's Bollywood debut film shoot will start shoot from August

‘அட்டக்கத்தி’, ‘மெட்ராஸ்’, ‘கபாலி’, ‘காலா’ திரைப்படங்களை இயக்கி தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர் இயக்குநர் பா.ரஞ்சித். தமிழ் திரைப்படங்களில் தனி முத்திரை பதித்த இயக்குநர் பா.ரஞ்சித் தற்போது பாலிவுட்டில் திரைப்படம் இயக்கவிருக்கிறார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிர்சா முண்டா என்ற பழங்குடியின சுதந்திர போராட்ட வீரரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கவிருக்கிறார். நமா பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவிருக்கும் இப்படம் மஹஸ்வேதா தேவி என்பவர் எழுதிய ‘ஆரண்யர் அதிகார்’ எனும் வங்காள மொழி நாவலை தழுவி உருவாகவுள்ளது.

இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் யாரும் இதுவரை தேர்வு செய்யப்படவில்லை. இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் துவங்கும் என தகவல்கள் கிடைத்துள்ளன. கடந்த ஆண்டு நவ.15ம் தேதி இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், இப்படம் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.