தமிழில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்த ‘சர்கார்’, தெலுங்கில் ‘மகாநடி/நடிகையர் திலகம்’ திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து கீர்த்தி நடிக்கவிருக்கும் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தற்போது பாலிவுட்டில் போனி கபூர் தயாரிப்பில் அஜய் தேவ்கன் நடிக்கும் படத்தின் மூலம் பாலிவுட்டில் கீர்த்தி சுரேஷ் அறிமுகமாகிறார். இந்தியாவின் முதல் கால்பந்து பயிற்சியாளர் சயது அப்துல் ரஹீமின் பயோபிக் படத்தில் நடிக்கிறார்.
இதையடுத்து தெலுங்கில் நாகேஷ் குக்குனூர் இயக்கும் படத்தில் கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் புனேவில் நடைபெற்று வருகிறது. இதனிடையே அடுத்ததாக தெலுங்கில் நரேந்திரநாத் இயக்கவிருக்கும் புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இப்படத்தின் ஷூட்டிங் ஒரேகட்டமாக 45 நாட்கள் ஐரோப்பாவில் நடைபெறவுள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களில் இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.