நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் அடுத்ததாக உருவாகவிருக்கும் ‘தனுசு ராசி நேயர்களே’ திரைப்படத்தின் நாயகி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கவிருக்கும் திரைப்படத்திற்கு ‘தனுசு ராசி நேயர்களே’ என தலைப்பிடப்பட்டது. இப்படத்தில் மெக்கானிக்காக நடிக்கும் ஹரிஷ் கல்யாண் ஜோதிடத்தின் மீது நம்பிக்கையுள்ள இளைஞராக நடிக்கவிருக்கிறார்.
இந்நிலையில், இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ரியா சக்ரபோட்டி நடிக்கவிருக்கிறார். இவரது நடிப்பில் இறுதியாக 2018-ல் ‘ஜலேபி’ என்ற பாலிவுட் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
ஸ்ரீ கோகுலம் மூவீஸ் பேனரின் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தின் இதர கதாபாத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Look what i found , you guys r so quick. Anyways Welcome on board🤗 @Tweet2Rhea for #DhanusuRaasiNeyargalae @isanjaybharathi @Gokulam_Movies @GhibranOfficial @DoneChannel1 #DRNTHEFILM pic.twitter.com/Vq1ouov2eW
— Harish kalyan (@iamharishkalyan) April 21, 2019