நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘திமிரு புடிச்சவன்’ திரைப்படம் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

விஜய் ஆண்டனியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் பேனரில் கணேஷா இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘திமிரு புடிச்சவன்’. இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்திருந்தார். மேலும், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், சாய் தீனா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
கடந்த 2018ம் ஆண்டு நவ.16ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.‘ரோஷகாடு’ என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் தெலுங்கு டப்பிங் வெர்ஷனை படக்குழுவினர் யூடியூப் தளத்தில் வெளியிட்டுள்ளனர். கட்டணம் ஏதுமின்றி யூடியூபில் இந்த படத்தை யார் வேண்டுமானாலும் இலவசமாக பார்க்கலாம்.
விஜய் ஆண்டனி இசையமைத்த இப்படத்திற்கு ரிச்சார்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்திருந்தார். இப்படத்தின் யூடியூப் ரிலீஸ் குறித்த தகவலை விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
In case you missed watching this Mass Cop Thriller in theatres,
Watch #RoshagaduFullMovie now on @telugufilmnagarhttps://t.co/dUgve3yrLb#RoshagaduOnTFN #RoshagaduArrives
— vijayantony (@vijayantony) May 28, 2019
யூடியூபில் வெளியான விஜய் ஆண்டனியின் லேட்டஸ்ட் படம் வீடியோ