www.garudabazaar.com
iTechUS

‘தங்க மீன்கள்’ ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிக்கும் புதிய படம்.. வெளியான அடுத்த அப்டேட்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'கற்றது தமிழ்', 'தங்க மீன்கள்', 'தரமணி', 'பேரன்பு' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ராம் அடுத்ததாக நடிகர் நிவின் பாலியை வைத்து புதிய திரைப்படம் ஒன்றை இயக்கினார்.

Ram Directs Mirchi Shiva and Grace antony shoot update

Images are subject to © copyright to their respective owners.

Also Read | ‘காதல் கண்டிஷன்ஸ் அப்ளை’ பட விழாவில் அசிம்..? - சீக்ரெட் உடைக்கும் ரவீந்தர்..! Exclusive

நிவின் பாலி, சூரி, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு "ஏழு கடல் ஏழு மலை" என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

மாநாடு உள்ளிட்ட சில திரைப்படங்களை தயாரித்துள்ள தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இந்த படத்தையும் தயாரித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். கலை இயக்கத்தை உமேஷ் ஜே குமார் கவனித்துள்ளார். 

ஏழு கடல் ஏழு மலை படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து விட்ட சூழலில், இதன் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் தற்போது நடைபெற்று வந்தது. இதனை அடுத்து, இயக்குநர் ராம் இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியானது. அதன்படி மிர்ச்சி சிவா நடிப்பில் ராம் ஒரு படத்தை இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின.

Ram Directs Mirchi Shiva and Grace antony shoot update

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் தான் Mirchi சிவா மற்றும் கிரேஸ் ஆண்டனி நடிப்பிலான இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. SEVEN SEES AND SEVEN HILLS புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை Disney+Hotstar வழங்குகிறது. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இதனை பகிர்ந்துள்ள பிக் பாஸ் ஐந்தாவது சீசன் டைட்டில் வின்னர் ராஜஜூ தம்முடைய வாழ்த்துக்களையும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Also Read | Kadhal Conditions Apply : மஹத் நடிப்பில் சிம்பு Influence இருக்கா? "".. LIBRA ரவீந்தர் பதிலடி..!

தொடர்புடைய இணைப்புகள்

Ram Directs Mirchi Shiva and Grace antony shoot update

People looking for online information on Disney Plus Hotstar, Katrathu Thamizh, Ram Mirchi Shiva Grace antony, Thangameengal will find this news story useful.