IRAVIN NIZHAL
www.garudabazaar.com

BREAKING: சசி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் புதிய படம்.. நேரடி OTT ரிலீஸா? எதுல?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் சசி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் கிடைத்துள்ளது.

Harish Kalyan Nooru koodi vanavil directly premiere on Disney plus Hotstar

Also Read | சிவகார்த்திகேயனின் அடுத்த படம்.. புதிய போஸ்டருடன் மாஸ் அப்டேட்! தயாரிப்பாளர் யார் தெரியுமா?

‘பூ’, ‘பிச்சைக்காரன்’, ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ உள்ளிட்ட படங்களை இயக்கிவர் இயக்குனர் சசி. தற்போது ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘நூறு கோடி வானவில்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தில் சித்தி இத்னானி, கதாநாயகியாக நடிக்கிறார். வெந்து தணிந்தது காடு படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே நடிகை சித்தி இத்னானி இந்த படத்தில் நடித்து முடித்துள்ளார்.

பாலாஜி காப்பா, அருண் அருணாச்சலம் தயாரிக்கும் இப்படத்துக்கு சித்து குமார் இசையமைக்கிறார். பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்கிறார். கோவை சரளா, தம்பி ராமையா, சின்னி ஜெயந்த், சம்பத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றது. இந்த படத்தின் மோஷன் போஸ்டர் & முன்னோட்ட டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது.

Harish Kalyan Nooru koodi vanavil directly premiere on Disney plus Hotstar

இந்நிலையில் இந்த படம் நேரடியாக ஒடிடியில் வெளியாக உள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ‘நூறு கோடி வானவில்’ படம், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் விரைவில் வெளியாக உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Harish Kalyan Nooru koodi vanavil directly premiere on Disney plus Hotstar

கடைசியாக நடிகர் ஹரீஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் நடித்த “ஓ மணப்பெண்ணே” படமும் Disney Plus Hotstar-ல் வெளியானது. இத்திரைப்படம் உலகம் முழுதும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Also Read | VIDEO: அருள் நிதி நடிக்கும் தேஜாவு படத்தின் மிரட்டல் டிரெய்லர்.. வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின்!

தொடர்புடைய இணைப்புகள்

Harish Kalyan Nooru koodi vanavil directly premiere on Disney plus Hotstar

People looking for online information on Disney Plus Hotstar, Harish Kalyan, Nooru koodi vanavil Movie, Nooru koodi vanavil premiere will find this news story useful.