www.garudabazaar.com
iTechUS

Kadhal Conditions Apply : மஹத் நடிப்பில் சிம்பு Influence இருக்கா? "".. LIBRA ரவீந்தர் பதிலடி..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நிதின் சத்யாவின் ஷ்வேத் நிறுவன தயாரிப்பில் LIBRA Productions ரவீந்தர் வழங்கும், இயக்குநர் அரவிந்த் இயக்கத்தில், மஹத் நடிப்பில் இக்கால இளைஞர்களை கவரும் வண்ணம் உருவாகியுள்ள காதல் திரைப்படம் “காதல் கண்டிசன்ஸ் அப்ளை”.

LIBRA Ravindar about Mahat Simbu kadhal conditions apply

Also Read | சூர்யா & ஜோதிகா பசங்க தியா, தேவ் நல்லா வளர்ந்துட்டாங்களே.. வைரல் Pics

மஹத்,  சானா கான், நிதின் சத்யா, திவ்ய தர்ஷினி,  பிக்பாஸ் அபிஷேக், பிக்பாஸ் மகேஸ்வரி, விவேக் பிரசன்னா மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை ஆர்.அரவிந்த் எழுதி இயக்கியுள்ளார்.  இப்படம் வெளியீட்டுக்கு தயாராகியுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் கோலாகலமாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது இப்படக்குழுவினர், பிஹைண்ட்வுஸ் யூடியூப் தளத்துக்கு பிரத்தியேக பேட்டி அளித்திருந்தனர்.

LIBRA Ravindar about Mahat Simbu kadhal conditions apply

அப்போது பேசிய மஹத், “சிம்புவின் Influence எனக்கு இருப்பதாக சொல்கிறார்கள். இப்போது கூட என் கணக்கு கலங்குகிறது. என்னையும் சிம்பு அவர்களையும் ஒப்பிடுவதை விட ஓவர் ஷேடோ செய்து பார்ப்பார்கள். ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒரு பிரேக் டைம் என்பது இருக்கும். அதற்கான நேரம் எடுக்கிறது அவ்வளவுதான்.” என்று கூறினார். இதனை தொடர்ந்து பேசிய ரவீந்தர், “மஹத் உண்மையாகவே உழைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவரிடம் சிம்புவின் Influence இருப்பதாக சொல்லப்படுவது என்பது பிரான்ட் செய்யப்படுகிறது அவ்வளவுதான். இந்த இசை விழாவில் சிம்பு இல்லாததே இந்த கருத்தை உடைக்கிறது.

LIBRA Ravindar about Mahat Simbu kadhal conditions apply

குறைந்தபட்சம் சிம்பு ஆடியோ லஞ்சுக்கு வருவார் என அனைவரும் ‌எதிர்பார்த்தார்கள்.‌ எனவே பொதுமக்கள் அப்படி பார்க்கலாம் ஆனால் திரைத்துறையில் இருப்பவர்கள் அப்படி பார்க்க தேவையில்லை என்றுதான் நினைக்கிறேன். சிம்புவே சொன்ன மாதிரி வரமும் அதுதான், சாபமும் அதுதான். இந்த திரைப்படத்திலும் மஹத்தின் நடிப்பு சிம்புவின் சாயலில் இருக்காது.

LIBRA Ravindar about Mahat Simbu kadhal conditions apply

இங்கு ஏகப்பட்ட நடிகர்கள் நன்றாக நடிக்க கூடியவர்களாக இருக்கிறார்கள். அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களை வைத்து படம் பண்ணும் யுக்தி என்பது வணிகம்தான். அதில் சந்தேகம் கிடையாது, ஆனால் அதை சரியாக தேர்வு செய்ய வேண்டும். அதனால் தான் ஒருவர் பார்த்தார், தன்னை நம்பி படம் எடுத்தார். லவ் டுடே படம்.. உச்ச கட்டத்துக்கு சென்றது. அந்த தயாரிப்பு நிறுவனத்திடம் இல்லாத பணமா? இன்றும் கதையை நம்பி எழுதி நடிகர்களை தேர்வு செய்பவர்கள் இருக்கிறார்கள்.” என தெரிவித்தார்.

Also Read | ‘காதல் கண்டிஷன்ஸ் அப்ளை’ பட விழாவில் அசிம்..? - சீக்ரெட் உடைக்கும் ரவீந்தர்..! Exclusive

KADHAL CONDITIONS APPLY : மஹத் நடிப்பில் சிம்பு INFLUENCE இருக்கா? "".. LIBRA ரவீந்தர் பதிலடி..! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

LIBRA Ravindar about Mahat Simbu kadhal conditions apply

People looking for online information on Behindwoods, Kadhal conditions apply, Libra, Mahat, Ravindar Chandrashekhar will find this news story useful.