www.garudabazaar.com

பிரபல ஓடிடிக்காக வெப்-சீரிஸில் நடிக்கும் பிரபல முன்னணி நடிகை! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகை கஜோல், பிரபல ஒடிடிக்காக வெப் சீரிஸில் நடிக்க உள்ளார்.

Kajol New Debut Web Series for Disney plus Hotstar

Also Read | மதன் கார்க்கி வரிகளில் சித் ஶ்ரீராம் பாடிய ROMANTIC பாடல்.. பிரம்மாஸ்திரா படத்தின் அடுத்த Super Update!

நடிகர் கஜோல் தனது முதல் வலைத் தொடரை இன்று (18.07.2022) அறிவித்தார். ஸ்ட்ரீமிங் பிளாட்ஃபார்ம் ஆன  டிஸ்னி+ ஹாட்ஸ்டார் யூடியூப்பில் பகிர்ந்த ஒரு சிறிய டீசரில், கஜோல் தனது 1995 ஆம் ஆண்டு திரைப்படமான தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே திரைப்படத்தின் ஒரு தருணத்தை நகைச்சுவையாக மீண்டும் நடித்து, தனது வெப வலைத்தொடர் அறிமுகத்தை அறிவித்துள்ளார்.

"ஹான் ஹான் மே ஹன் (ஆம் அது நானே)" என்று அந்த வீடியோவில் கூறினார்.  நடிகை கஜோல், கடந்த ஆண்டு ஜனவரியில் ரேணுகா ஷஹானே 'Tribhanga' படத்தின் மூலம் OTTயில் அறிமுகமானார்.

Kajol New Debut Web Series for Disney plus Hotstar

இந்த படம் நெட்பிளிக்ஸில் வெளியானது. வரவிருக்கும் வெப்-சீரிஸ் பற்றிய தனது உற்சாகத்தைப் பகிர்ந்து கொண்ட கஜோல், “புதிய வடிவங்களை ஆராய்வது எப்போதுமே சவாலாக இருக்கிறது. சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்வதை நான் விரும்புவதால் இது ஒரு பெரிய விஷயம்.

Kajol New Debut Web Series for Disney plus Hotstar

டிஜிட்டல் தொடர்களின் தீவிர ரசிகராக இருப்பதால், ஆர்யா மற்றும் ருத்ரா போன்ற அருமையான நிகழ்ச்சிகளைப் ரசித்த பிறகு, எனது வலைத்தொடர் பயணத்தைத் தொடங்க டிஸ்னி+ ஹாட்ஸ்டாரைத் தவிர வேறு எந்த தளமும் இல்லை என்று எனக்குத் தெரியும்" என கூறியுள்ளார்.

Kajol New Debut Web Series for Disney plus Hotstar

நடிகை ரேவதி இயக்கும் சலாம் வெங்கி படத்திலும் கஜோல் நடிக்கிறார். இந்த படம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டது. இதில் விஷால் ஜெத்வா, அஹானா கும்ரா ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தில் நடிகர் அமீர்கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார்.

Also Read | அடேங்கப்பா.. 'RRR' படத்துல அந்த சீன்.. மிரண்டு போய் பாராட்டிய மார்வெல் இயக்குனர்கள்!

பிரபல ஓடிடிக்காக வெப்-சீரிஸில் நடிக்கும் பிரபல முன்னணி நடிகை! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Kajol New Debut Web Series for Disney plus Hotstar

People looking for online information on Disney Plus Hotstar, Kajol, Kajol New Debut Web Series, Web Series will find this news story useful.