www.garudabazaar.com
iTechUS

ஆட்ட நாயகன்.! யூடியூப் மொத்தமும் Trend ஆகும் விஜய் -ன் LEO, Varisu பட Songs ..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் தான் தற்போதைய யூடியூப் ட்ரெண்டிங்கில் முன்னிலையில் இருக்கிறார்.

Actor Vijay movie and songs Top Trending in Youtube

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "Azeem பண்ணது தப்புன்னா, அவரு பண்ணதும் தப்பு தான்".. விளக்கம் கொடுத்து முற்றுப்புள்ளி வைத்த தனா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்வருபவர் விஜய். இவருடைய நடிப்பில் சமீபத்தில் வாரிசு திரைப்படம் வெளியானது. வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத் குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஷியாம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 11 ஆம் தேதி வெளியானது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. மேலும், இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ரஞ்சிதமே பாடல் ரசிகர்களை திக்குமுக்காட செய்தது என்றே செல்லவேண்டும்.

Actor Vijay movie and songs Top Trending in Youtube

Images are subject to © copyright to their respective owners.

முன்னரே இந்த பாடல் யூடியூபில் வெளியிடப்பட்ட நிலையில் தற்போதும் இந்த படம் ட்ரெண்டிங்கில் உள்ளது. இதனிடையே தளபதி 67 படம் குறித்த அப்டேட்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதன்படி விஜய் நடிக்கும் 67 படத்திற்கு 'லியோ' என பெயரிடப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக படக்குழு வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தது.

Actor Vijay movie and songs Top Trending in Youtube

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்க, நடிகர் விஜய்யுடன் த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், அர்ஜூன் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படம் வரும் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி திரையரங்குகளில் லியோ படம் வெளியாக உள்ளது. ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு இந்த படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

Actor Vijay movie and songs Top Trending in Youtube

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் இப்படத்தின் 'ப்ளடி ஸ்வீட் ப்ரோமோ'-வை படக்குழு வெளியிட்டிருந்தது. தற்போது இந்த ப்ரோமோ வீடியோ, ரஞ்சிதமே பாடல், செலிபிரெஷன் ஆஃப் வாரிசு, தீ தளபதி பாடல் ஆகியவை யூடியூபில்  டாப் ட்ரெண்டிங்கில் இருக்கின்றன.

Also Read | சூர்யா & ஜோதிகா பசங்க தியா, தேவ் நல்லா வளர்ந்துட்டாங்களே.. வைரல் Pics

தொடர்புடைய இணைப்புகள்

Actor Vijay movie and songs Top Trending in Youtube

People looking for online information on Trending, Vijay, Vijay movie and songs will find this news story useful.