www.garudabazaar.com
iTechUS

‘காதல் கண்டிஷன்ஸ் அப்ளை’ பட விழாவில் அசிம்..? - சீக்ரெட் உடைக்கும் ரவீந்தர்..! Exclusive

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நிதின் சத்யாவின் ஷ்வேத் நிறுவன தயாரிப்பில் LIBRA Productions ரவீந்தர் வழங்கும், இயக்குநர் அரவிந்த் இயக்கத்தில், மஹத் நடிப்பில் இக்கால இளைஞர்களை கவரும் வண்ணம் உருவாகியுள்ள காதல் திரைப்படம் “காதல் கண்டிசன்ஸ் அப்ளை”.

LIBRA Ravindhar about azeem and kadhal conditions apply

Images are subject to © copyright to their respective owners.

Also Read | மற்றுமொரு சோகம்.! பிரபல ரஜினி, கமல் படங்கள் & ‘சுயம்வரம்’ பட தயாரிப்பாளர் திடீர் மரணம்.!

மஹத்,  சானா கான், நிதின் சத்யா, திவ்ய தர்ஷினி,  பிக்பாஸ் அபிஷேக், பிக்பாஸ் மகேஸ்வரி, விவேக் பிரசன்னா மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை ஆர்.அரவிந்த் எழுதி இயக்கியுள்ளார்.  இப்படம் வெளியீட்டுக்கு தயாராகியுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் கோலாகலமாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது இப்படக்குழுவினர், பிஹைண்ட்வுஸ் யூடியூப் தளத்துக்கு பிரத்தியேக பேட்டி அளித்திருந்தனர்.

LIBRA Ravindhar about azeem and kadhal conditions apply

இந்த நிலையில் பிக்பாஸ் அசிம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வந்தது குறித்து ரவீந்தர் இந்த பேட்டியில் பேசியுள்ளார். முன்னதாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் தினசரி நிகழ்வுகள் குறித்து தமது விமர்சன பார்வைகளை ரவீந்தர் முன்வைத்து வந்தார். இந்நிலையில் ரவீந்தரின் படவிழாவுக்கு அசிம் அழைக்கப்பட்டது குறித்து பேசிய ரவீந்தர், “பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அசிம் போன் பண்ணி என்னிடம் பேசினார்.

LIBRA Ravindhar about azeem and kadhal conditions apply

Images are subject to © copyright to their respective owners.

எங்களிடையே ஒரு நட்பு வளர்ந்தது. அப்போது இந்த இசை விழாவுக்கு வாங்க பிரதர் என்று கூறினேன். அந்த அடிப்படையில் அவர் வந்தார். ஆனால் வந்த பிறகுதான் நான் உணர்ந்தேன், மேடையில் அனைவருமே பிக் பாஸ் போட்டியாளர்களாக இருந்தனர். கிட்டத்தட்ட பிக் பாஸ் ஸ்கூல் மாதிரி இருந்தது. மற்றபடி நட்பின் அடிப்படையிலேயே அசிம் அழைக்கப்பட்டார். வேறு எந்த உள்நோக்கமும் இல்லை” எனச் சொல்லி சிரிக்கிறார்.

LIBRA Ravindhar about azeem and kadhal conditions apply

அண்மையில் நடந்து முடிந்த பிக்பாஸ் 6வது சீசனில் மொத்தம் 21 பேர் போட்டியாளர்களாக களமிறங்கி இருந்த நிலையில், அனைத்து எபிசோடுகளும் விறுவிறுப்பாகவும் நிறைந்த படி சென்றது. மொத்தமுள்ள போட்டியாளர்களில் இருந்து அசிம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகியோர், Finale சுற்றுக்கு முன்னேற்றம் கண்டிருந்தனர். இதில், ஷிவின் 3 ஆவது இடம் பிடித்திருந்தார். இதற்கடுத்து, பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அசிம் டைட்டில் வின்னர் என கமல்ஹாசன் அறிவித்திருந்தார். மேலும் அவருக்கு 50 லட்ச ரூபாயும், காரும் பரிசாக வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | பா.இரஞ்சித் தயாரிப்பில் உருவாகும் 'தண்டகாரண்யம்' .. இயக்குநர் இவரா?

‘காதல் கண்டிஷன்ஸ் அப்ளை’ பட விழாவில் அசிம்..? - சீக்ரெட் உடைக்கும் ரவீந்தர்..! EXCLUSIVE வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

LIBRA Ravindhar about azeem and kadhal conditions apply

People looking for online information on Behindwoods, Kadhal conditions apply, Libra, Ravindhar Chandrashekhar will find this news story useful.