www.garudabazaar.com
iTechUS

ஷாருக்கான் நடிப்பில் பதான்.. ஸ்பெஷல் ஷோ பார்த்த கமல்.. உடன் இருந்த 80ஸ் நடிகைகள்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஷாருக் கான் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருந்த பாலிவுட் திரைப்படம் 'பதான்'. இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கி இருந்தார். மேலும் ஷாருக் கானுடன் தீபிகா படுகோனே, ஜான் ஆப்ரஹாம் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

Ulaga Nayagan Kamalhaasan watch shah rukh khan pathaan

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "Azeem பண்ணது தப்புன்னா, அவரு பண்ணதும் தப்பு தான்".. விளக்கம் கொடுத்து முற்றுப்புள்ளி வைத்த தனா

பதான் திரைப்படம், கடந்த ஜனவரி மாதம் 25 ஆம் தேதியன்று வெளியாகி இருந்த நிலையில், பெரிய அளவில் பாலிவுட்டில் வெற்றியையும் பெற்றிருந்தது. அது மட்டுமில்லாமல், வசூல் ரீதியாகவும், பெரிய வெற்றி பெற்றிருந்த பதான் திரைப்படம், பாலிவுட் சினிமாவில் ஒரு மைல்கல்லாகவும் தற்போது மாறி உள்ளது.

அதே போல, சமீபத்திய கால பாலிவுட் திரைப்படங்களில் பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படம் ஆகவும் பதான் மாறி உள்ளது. இந்த வெற்றியை இந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Ulaga Nayagan Kamalhaasan watch shah rukh khan pathaan

Images are subject to © copyright to their respective owners.

இந்த நிலையில், பதான் படத்தினை உலக நாயகன் கமல்ஹாசன் பார்த்துள்ளார். அவருடன் நடிகைகள் சுஹாசினி மணிரத்னம், சோபனா மற்றும் ஜெய்ஸ்ரீ உள்ளிட்ட பலரும் இருந்தனர். இது தொடர்பாக, கமல்ஹாசன், சுஹாசினி மற்றும் சோபனா ஆகியோருடன் தான் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ஜெய்ஸ்ரீ பகிர்ந்துள்ளார்.

Ulaga Nayagan Kamalhaasan watch shah rukh khan pathaan

Images are subject to © copyright to their respective owners.

நடிகர் கமல்ஹாசனுக்காக பதான் படத்தின் ஸ்பெஷல் காட்சியின் போது தனக்கு கிடைத்த அழைப்பின் பெயரில் அங்கே வந்து இரண்டாவது முறையாக பதான் படத்தை பார்த்ததாகவும் ஜெய்ஸ்ரீ குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. நடிகர் கமல்ஹாசன் இயக்கி இருந்த ஹேராம் திரைப்படத்தில் அவருடன் இணைந்து ஷாருக் கான் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | "கமல் அண்ணன்".. பிக் பாஸ் முடிந்த பின் கமல்ஹாசனை நேரில் சந்தித்த விக்ரமன்!!

தொடர்புடைய இணைப்புகள்

Ulaga Nayagan Kamalhaasan watch shah rukh khan pathaan

People looking for online information on Kamal Haasan, Kamalhaasan watch shah rukh khan pathaan Movie, Pathaan, Shah Rukh Khan, Ulaga Nayagan Kamalhaasan will find this news story useful.