Veetla Vishesham Others Page USA

“இவன் படம்லாம் நடிக்கிறானா..? ஹீரோயின் நயன்தாரான்னுவான் போல” - ரித்து meets வீரா.. செம ப்ரோமோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நயன்தாரா  நடிப்பில், இயக்குநர் விக்னேஷ் GS இயக்கத்தில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் SR பிரகாஷ் பாபு, SR பிரபு இணைந்து தயாரித்திருக்கும் த்ரில்லர் டிராமா திரைப்படம்  “O2”.

Rythvik new promo in disney Plus hotstar O2 Nayanthara

Also Read | Gal Gadot கூட நடிக்கும் முதல் ஹாலிவுட் படம்.. SUPER போட்டோவை வெளியிட்டு அப்டேட் கொடுத்த ஆலியா பட்

ஒரு தாய் தன் 8 வயது மகனுடன் விபத்தில் சிக்கும் ஒரு பேருந்தில் மாட்டிக்கொள்கிறாள். நுரையீரல் பிரச்சனைக்காக  எப்போதும் தன் மகனிடம் இருக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டரை பேருந்தில் சகபயணிகள் குறிவைக்க தன் மகனை அவள் எவ்வாறு காப்பாற்றுகிறாள் என்பதைப் பரபரப்பாகச் சொல்லும் படம் தான்  “O2”. தமிழ்நாடு , கேரளா இணையும் மலைப்பகுதியில் இக்கதை நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் விக்னேஷ் GS எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு, விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். தமிழ் A அழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். செல்வா RK படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் SR பிரகாஷ் பாபு, SR பிரபு இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.

Rythvik new promo in disney Plus hotstar O2 Nayanthara

இப்படத்தில் தாய் பார்வதியாக நடிகை நயன்தாரா நடிக்க, மகனாக ரித்விக் நடித்துள்ளார். இவர்களுடன் லீணா, RNR மனோகர், ஆடுகளம் முருகதாஸ், ஜாஃபர் இடுக்கி ஆகியோர் நடித்துள்ளனர்.  இவர்களுள் நயன்தாராவின் மகனாக நடிக்கும் ரித்துவுக்கு அறிமுகமே தேவையில்லை எனும் அளவுக்கு யூடியூப் சேனல், டிவி விளம்பரம் என பல நிலைகளிலும் மக்களிடம் சென்றடைத்துவிட்டார். தற்போது நயன்தாராவின் படத்தில் ரித்து நயன்தாராவின் மகனாக வீரா எனும் கேரக்டரில் நடித்துள்ளார்.

இந்நிலையில் ரித்து - வீராவை சந்தித்தால் எப்படி இருக்கும்? என கற்பனையான வீடியோ ஒன்றை படத்தின் புரொமோஷனுக்காக டிஸ்னி+ஹாட் ஸ்டார் வெளியிட்டுள்ளது. இதில் ரித்துவுக்கே உரிய நக்கல் நையாண்டி பாணியில் வயதான தோற்றமுடைய ரித்து பேச, படத்தில் வரும் வீரா அமைதியாக அவற்றுக்கு பதில் சொல்வது போல் இந்த வீடியோ அமைந்துள்ளது.

Rythvik new promo in disney Plus hotstar O2 Nayanthara

கலாய்ப்பதில் வல்லவரான ரித்து, இந்த வீடியோவில்,. “இவன்லாம் படம் நடிக்கிறானா..?” என தன்னை தானே கலயாப்பதெல்லாம் வேற ரகம். யூடியூப் சேனல்களில் அட்ராசிட்டி பண்ணும் ரித்துவின் சேட்டைகளுக்காக பலரும் அவருடைய நடிப்பை விரும்பி பார்ப்பதுண்டு.

ஆனால் எப்போதுமே துருதுருவென இருக்கும் ரித்து படத்தில் தம்முடைய பாணியில் இருந்து முற்றிலுமாக விலகி நின்று நயன்தாராவின் மகனாக, அதாவது வீரா எனும் கேர்க்டராக நடித்துள்ளதுதான் இன்னும் ஆச்சரியமான விஷயம் என ரித்துவை அறிந்தவர்கள் கூறும் ஒட்டுமொத்த கருத்தாக இருக்கிறது.

Also Read | பிரியாணிக்கு பதில் சாம்பார் சாதம்.. கீர்த்தி சுரேஷ் பகிர்ந்த BTS போட்டோ! மாமன்னன் அப்டேட்

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Rythvik new promo in disney Plus hotstar O2 Nayanthara

People looking for online information on Dream Warrior Pictures, Nayanthara, O2 Movie, Rithu, Rythvik, SR Prabhakaran, SR Prabhu will find this news story useful.