www.garudabazaar.com

மாலத்தீவு 5 STAR ஹோட்டலில் ரகுல் ப்ரீத் சிங்.. ஒரு நாள் தங்க வாடகை மட்டும் இம்புட்டா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ரகுல் ப்ரீத் சிங், தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா  சென்றுள்ளார்.

Rakul Preet Singh Maldives Vacation Finolhu Baa Atoll

Also Read | STR நடிக்கும் 'பத்து தல' படத்தின் திருவிழா பாடல் காட்சி.. வைரலாகும் BTS ஃபோட்டோ!

32 வயதாகும் நடிகை ரகுல் ப்ரித் சிங், இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழில் கார்த்தியுடன் தேவ், தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களிலும், சூர்யாவுடன் NGK படத்திலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் அறியப்படுபவர்.

இவர் தெலுங்கு & இந்தி சினிமாவிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர். ரகுல் ப்ரீத் சிங், தற்போது சிவகார்த்திகேயனுடன் அயலான் படத்திலும், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படத்திலும் நடித்து வருகிறார்.

Rakul Preet Singh Maldives Vacation Finolhu Baa Atoll

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ரகுல் பிரித் சிங் முக்கியமானவர். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை 23 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கின்றனர்.

நடிகை ரகுல் ப்ரீத் சிங், சமீபத்தில் தனது பிறந்தநாளை காதலருடன் கொண்டாடினார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் காதலர் ஜாக்கி பாக்னானி கலந்து கொண்டார். சில மாதங்களுக்கு முன் நடிகை ரகுல் பிரித் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டு பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான ஜக்கி பக்னானியை காதலிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

Rakul Preet Singh Maldives Vacation Finolhu Baa Atoll

ஜாக்கி பாக்னானி தமிழில் திரிஷாவுடன் மோகினி படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாலிவுட்டில் முன்னணி தயாரிப்பாளராக, நடிகராக வலம் வருபவர் தான் ஜாக்கி.

இந்நிலையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங், மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு கடற்கரை அருகில் உள்ள பிரபல Finolhu Baa Atoll நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளார்.  இந்த ஐந்து நட்சத்திர விடுதியில் ஒரு நாள் தங்குவதற்கான வாடகை மட்டும் இந்திய பண மதிப்பில் சுமார் 36 ஆயிரம் ரூபாய் முதல் 64 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. தர்வந்து விமான நிலையத்தில் இருந்து 26 கிலோமீட்டர் தொலைவில் இந்த கடற்கரை ஹோட்டல் அமைந்துள்ளது.

Rakul Preet Singh Maldives Vacation Finolhu Baa Atoll

நீச்சல் குளம் & கடற்கரையில் இருந்து புகைப்படங்களை ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.

Also Read | PHOTOS: காமாட்சி அம்மன் கோயிலில் பிரபல PS1 நடிகை.. நெற்றி நிறைய விபூதி பூசி வைரல் ஃபோட்டோஸ்!

தொடர்புடைய இணைப்புகள்

Rakul Preet Singh Maldives Vacation Finolhu Baa Atoll

People looking for online information on Maldives Vacation, Rakul Preet Singh, Rakul Preet Singh Maldives Vacation will find this news story useful.