www.garudabazaar.com

வேகமெடுக்கும் பிக்பாஸ்... தீபாவளி வெடி இப்போ வெடிக்குதே.. சரவெடி ப்ரோமோ.. !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 6 வது சீசன், 3 வது வாரத்தை கடந்துள்ளது.

biggboss 6 tamil new promo with nomination list for eviction

Also Read | பிரபல OTT-யில் ரிலீஸாகும் இரவின் நிழல்.. எப்போ? பார்த்திபன் கொடுத்த OFFICIAL அப்டேட்!

கடந்த வாரம் முழுக்க டாஸ்க்கின் பெயரில் பிக்பாஸ் வீட்டில் ஏரளமான குழப்பங்கள் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறி இருந்தது.

அதிலும் குறிப்பாக, பொம்மை டாஸ்க் பெயரில் ஷெரினா கீழே விழுந்ததில் இருந்து அங்கே ஏராளமான பிரச்சனைகள் நிலவி வந்தது.

இதற்கு மிக முக்கிய காரணம், தனலட்சுமி தான் ஷெரினாவை தள்ளி விட்டிருப்பார் என சிலர் கூறி வந்ததால் தான். ஷெரினாவுக்கு ஆதரவாக சிலரும், தனலட்சுமிக்கு ஆதரவாக சிலரும் பிக்பாஸ் வீட்டில் கருத்துக்ளை தெரிவிக்க தொடர்ந்து பல விவாதங்கள் அரங்கேறி இருந்தது. இதனிடையே, சில போட்டியாளர்கள் மத்தியில் அசீம் சண்டை போட்டு வந்ததும் அதிக பரபரப்பை பிக்பாஸ் வீட்டிற்குள் கிளப்பி இருந்தது.

biggboss 6 tamil new promo with nomination list for eviction

இப்படி பல விஷயங்கள் கடந்த ஒரு வாரத்தில் நடந்த பல்வேறு பிரச்சனைகளுக்கும் வார இறுதியில் வந்த கமல்ஹாசன் விளக்கம் அளித்திருந்தார். மேலும், ஷெரினா கீழே விழுந்ததற்கு தனலட்சுமி காரணமில்லை என்பதையும் குறும்படம் போட்டு உறுதி செய்த கமல்ஹாசன், அசீமின் செயலையும் கண்டித்திருந்தார்.

biggboss 6 tamil new promo with nomination list for eviction

இதனையடுத்து, நாமினேஷன் பட்டியலில் அசீம், மகேஸ்வரி மற்றும் அசல் கோலார் ஆகியோர் இருந்தனர். இதில், அசல் கோலார் பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில், அடுத்த வார நாமினேஷன் தொடர்பாக வெளியாகி உள்ள ப்ரோமோ, இன்னும் விறுவிறுப்பை எகிற வைத்துள்ளது.

biggboss 6 tamil new promo with nomination list for eviction

இந்த ப்ரோமோவில் ஒவ்வொரு போட்டியாளர்களும் உள்ளே சென்று தாங்கள் நாமினேட் செய்ய விரும்பும் போட்டியாளர்கள் பெயரை சொல்வது போல காட்சி உள்ளது. மேலும், "ரொம்ப Manipulate பண்ற மாதிரி இருக்கு, அத்துமீறி பேசுனது எனக்கு பிடிக்கல. Issueஅ பெருசு பண்ணணும்ன்னு நெனைக்குறாரு. எந்த சண்டையிலும் நிக்க மாட்டேங்குறாரு. Disgust words யூஸ் பண்றாரு. Healthஅ பகடைக்காயா  பயன்படுத்துறாங்க போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி இந்த வார Eviction Processற்கு நாமினேட் ஆன நபர்கள், அசீம், ஆயிஷா, ஷெரினா, கதிரவன் மற்றும் விக்ரமன்" என பிக்பாஸ் பேசுவது ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது.

Also Read | அம்மாவான சீரியல் நடிகை சந்திரா.. குழந்தையின் ஃபோட்டோவை வெளியிட்டு நெகிழ்ச்சி பதிவு!

தொடர்புடைய இணைப்புகள்

biggboss 6 tamil new promo with nomination list for eviction

People looking for online information on Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Eviction, Nomination list, Vijay Television, Vijay tv will find this news story useful.