www.garudabazaar.com

காதலருடன் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.. லண்டனில் பிறந்தநாள் கொண்டாடிய வைரல் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Rakul Preet Singh Celebrating Birthday with Her Lover At London

Also Read | வசூல் மழை பொழியும் 'பொன்னியின் செல்வன்'.. உலகம் முழுவதும் இத்தனை கோடி வசூலா? முழு விவரம்

32 வயதாகும் நடிகை ரகுல் ப்ரித் சிங், இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழில் கார்த்தியுடன் தேவ், தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களிலும், சூர்யாவுடன் NGK படத்திலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் அறியப்படுபவர். இவர் தெலுங்கு & இந்தி சினிமாவிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர்.

ரகுல் ப்ரீத் சிங், தற்போது சிவகார்த்திகேயனுடன் அயலான் படத்திலும், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படத்திலும் நடித்து வருகிறார்.

சில மாதங்களுக்கு முன் நடிகை ரகுல் பிரித் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டு பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான ஜக்கி பக்னானியை காதலிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

Rakul Preet Singh Celebrating Birthday with Her Lover At London

ஜாக்கி பாக்னானி தமிழில் திரிஷாவுடன் மோகினி படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாலிவுட்டில் முன்னணி தயாரிப்பாளராக, நடிகராக வலம் வருபவர் தான் ஜாக்கி.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ரகுல் பிரித் சிங் முக்கியமானவர். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை 23 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கின்றனர்.

இந்நிலையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங், தனது பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடினார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் காதலர் ஜாக்கி பாக்னானி கலந்து கொண்டார். மேலும் "மேரி ஹஸ்பன்ட் கி பீவி" படத்தில் நடித்து வரும் சக நடிகர்கள் அர்ஜூன் கபூர், பூமி பட்னேகர், டினோ மோரியா ஆகியோர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Rakul Preet Singh Celebrating Birthday with Her Lover At London

கடைசியாக ரகுல் ப்ரித் சிங் நடிப்பில் இந்தியில் ரிலீஸ் ஆன   கட்புட்லி படத்தில் ரகுல் நடித்திருங. இந்த கட்புட்லி திரைப்படம் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடியில் வெளியானது.

இந்த கட்புட்லி திரைப்படம், தமிழில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த ராட்சசன் படத்தின் இந்தி ரீமேக் ஆகும். விஷ்ணு விஷால் நடித்த அருண் கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடித்துள்ளார். அமலா பால் நடித்த விஜி கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரித் சிங் நடித்துள்ளார்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rakul Singh (@rakulpreet)

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rakul Singh (@rakulpreet)

Also Read | சிவகார்த்திகேயன் நடிக்கும் 'PRINCE'.. சென்சார் போர்டு கொடுத்த சர்டிபிகேட் & ரன்னிங் டைம் விவரம்!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Rakul Preet Singh Celebrating Birthday with Her Lover At London

People looking for online information on London, Rakul Preet Singh, Rakul Preet Singh Celebrating Birthday will find this news story useful.