www.garudabazaar.com

"நான் கோவக்காரன் சார், மோசக்காரன் கிடையாது".. விளக்கிய அசீம்.. கமல் கொடுத்த வைரல் Reply!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 6 வது சீசன், 3 வது வாரத்தை கடந்துள்ளது.

Azeem explain about himself kamalhaasan viral reply

Also Read | வேகமெடுக்கும் பிக்பாஸ்... தீபாவளி வெடி இப்போ வெடிக்குதே.. சரவெடி ப்ரோமோ.. !

கடந்த வாரம் முழுக்க டாஸ்க்கின் பெயரில் பிக்பாஸ் வீட்டில் ஏரளமான குழப்பங்கள் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறி இருந்தது.

அதிலும் குறிப்பாக, பொம்மை டாஸ்க் பெயரில் ஷெரினா கீழே விழுந்ததில் இருந்து அங்கே ஏராளமான பிரச்சனைகள் நிலவி வந்தது.

இதற்கு மிக முக்கிய காரணம், தனலட்சுமி தான் ஷெரினாவை தள்ளி விட்டிருப்பார் என சிலர் கூறி வந்ததால் தான். ஷெரினாவுக்கு ஆதரவாக சிலரும், தனலட்சுமிக்கு ஆதரவாக சிலரும் பிக்பாஸ் வீட்டில் கருத்துக்ளை தெரிவிக்க தொடர்ந்து பல விவாதங்கள் அரங்கேறி இருந்தது. இதனிடையே, சில போட்டியாளர்கள் மத்தியில் அசீம் சண்டை போட்டு வந்ததும் அதிக பரபரப்பை பிக்பாஸ் வீட்டிற்குள் கிளப்பி இருந்தது.

Azeem explain about himself kamalhaasan viral reply

இப்படி பல விஷயங்கள் கடந்த ஒரு வாரத்தில் நடந்த பல்வேறு பிரச்சனைகளுக்கும் வார இறுதியில் வந்த கமல்ஹாசன் விளக்கம் அளித்திருந்தார். மேலும், ஷெரினா கீழே விழுந்ததற்கு தனலட்சுமி காரணமில்லை என்பதையும் குறும்படம் போட்டு உறுதி செய்த கமல்ஹாசன், அசீமின் செயலையும் கண்டித்திருந்தார்.

இதனையடுத்து, நாமினேஷன் பட்டியலில் அசீம், மகேஸ்வரி மற்றும் அசல் கோலார் ஆகியோர் இருந்தனர். இதில், அசல் கோலார் பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டிருந்தார். இதனிடையே, கமல்ஹாசன் முன்பு கதிரவன் பற்றி அசீம் பேசிக் கொண்டிருந்த விஷயமும் நடுவே கமல் அதற்கு கொடுத்த ரிப்ளையும் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Azeem explain about himself kamalhaasan viral reply

பிக்பாஸ் வீட்டில் நொங்கு குலை ஒன்று கொடுக்கப்படுகிறது. பிக்பாஸ் வீட்டிற்குள் நோகாமல் நொங்கு தின்பது யார் என்பதை பற்றி போட்டியாளர்கள் ஒவ்வொருவரிடம் கேள்வி கேட்கப்படுகிறது. அதாவது, பெரிய அளவில் எதுவும் செய்யாமல், தங்கள் இடத்தை தக்க வைத்துக் கொள்வது யார் என்பது தான். இதில் பல போட்டியாளர்களும் கதிரவன், ராபர்ட் மாஸ்டர், ராம் உள்ளிட்டோரை தேர்வு செய்திருந்தனர்.

அப்போது கதிரவனை தேர்வு செய்து பேசும் அசீம், "நான் கதிரை தான் சார் சொல்லுவேன். அவன் என் ஃப்ரெண்ட் தான். ஆனாலும் முதல் வாரத்திலேயே அவனிடம் நான் சொல்லி இருந்தேன், 'அமைதியா இருக்குறது நல்ல விஷயம் தான். ஆனால் எந்த இடத்தில் Voice over பண்ணணுமோ அந்த இடத்தில் பண்ணு. ஆனால், என் அளவுக்கு வாய்ஸ் ஓவர் பண்ணாத. ஓரளவுக்கு பண்ணு' என சொல்லி இருந்தேன்.

Azeem explain about himself kamalhaasan viral reply

இன்னொன்னு சார். நான் வந்து கோவக்காரன் சார், ஆனா மோசக்காரன் கிடையாது சார்" என்றதும் இடைமறித்த கமல்ஹாசன், "இந்த விளக்கம் நான் கேக்கல" என்கிறார். இதனைக் கேட்டதும் உள்ளே இருந்த போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் என அனைவரும் கைத்தட்டி ஆரவாரம் செய்திருந்தனர். தொடர்ந்து பேசிய கமல், "நீங்க விளக்கம் நல்லா கொடுக்குறீங்க. ஆனா நம்புறது மாதிரி இல்ல" என்றும் தெரிவிக்கிறார்.

முன்னதாக சக போட்டியாளர்களிடம் சண்டை போட்ட அசீம், அதன் பின்னர் "நான் கோவக்காரன் தான், ஆனா பாவக்காரன் கிடையாது" என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | "சரி விடு.. அப்டி இருக்கனும்னு தோனுச்சுனா சீக்கிரம் வெளில வா" - கதறியழுத நிவாஷினி.. தேற்றிய அசல்

தொடர்புடைய இணைப்புகள்

Azeem explain about himself kamalhaasan viral reply

People looking for online information on Azeem, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Kamal Haasan, Vijay Television will find this news story useful.