www.garudabazaar.com

STR நடிக்கும் 'பத்து தல' படத்தின் திருவிழா பாடல் காட்சி.. வைரலாகும் BTS ஃபோட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிம்பு & கௌதம் கார்த்திக் நடிக்கும் 'பத்து தல' படத்தின் படப்பிடிப்பு புகைப்படத்தை இயக்குனர் கிருஷ்ணா வெளியிட்டுள்ளார்.

Pathu Thala Movie Hyderabad Song Shooting Spot BTS

Also Read | பிரபல OTT-யில் ரிலீஸாகும் இரவின் நிழல்.. எப்போ? பார்த்திபன் கொடுத்த OFFICIAL அப்டேட்!

மாநாடு, வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை தொடர்ந்து, நடிகர் சிம்பு அடுத்ததாக கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன 'மஃப்ட்டி' படத்தின் ரீமேக்காக 'பத்து தல' படம் உருவாகிறது.

2017 ஆம் ஆண்டு நியோ நோயர் வகைமையில் உருவான இந்த படம் கன்னட சினிமாவில் மிக முக்கிய அந்தஸ்தை பெற்றது. நிழல் உலக தாதாவை தேடிப்போகும் ரகசிய போலிஸ் பற்றிய கதை தான் இந்த படம். சிவராஜ் குமார் நடித்த படங்களில் அதிக வசூல் செய்த படம் இது தான்.

Pathu Thala Movie Hyderabad Song Shooting Spot BTS

இந்த திரைப்படத்தில், சிம்புவுடன் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.  இயக்குனர் கௌதம் மேனன், பத்து தல படத்தில் சிம்புவுக்கு வில்லனாக நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஸ்டுடியோ கிரீன், K. E. ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் எடிட்டராக தேசிய விருது பெற்ற எடிட்டர் பிரவீன் K L பணிபுரிகிறார்.

பத்து தல படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்திருந்த நிலையில், இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்திலும், மூன்றாவது கட்டப்படிப்பு கன்னியாகுமரியில் நடந்திருந்தது. நான்காம் கட்ட படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி பகுதியில் நடந்தது.  இந்த படத்தின் 5ஆம் கட்ட படப்பிடிப்பு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் கோவிலூரில் நடந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு  கர்நாடக மாநிலத்தில் உள்ள துங்கபத்திரை அணையில் நடந்தது.

Pathu Thala Movie Hyderabad Song Shooting Spot BTS

இந்நிலையில் இந்த படத்தின் தற்போதைய படப்பிடிப்பு ஐத்ராபாத் நகரில் நடந்து வருகிறது. கோவில் செட் அமைத்து பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்த பாடல் காட்சிகளின் படப்பிடிப்பு புகைப்படத்தை இயக்குனர் கிருஷ்ணா தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தீப்பொறி சூழ திருவிழா பிண்ணனியில் இந்த புகைப்படம் அமைந்துள்ளது.

'பத்து தல' திரைப்படம் இந்த ஆண்டு, டிசம்பர் 14 ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Also Read | அம்மாவான சீரியல் நடிகை சந்திரா.. குழந்தையின் ஃபோட்டோவை வெளியிட்டு நெகிழ்ச்சி பதிவு!

தொடர்புடைய இணைப்புகள்

Pathu Thala Movie Hyderabad Song Shooting Spot BTS

People looking for online information on Gautham Karthik, Pathu Thala, Pathu thala Movie updates, Silambarasan TR will find this news story useful.