www.garudabazaar.com

பிரபல OTT-யில் ரிலீசாகும் 'ராட்சசன்' இந்தி ரீமேக்.. ரகுல் ப்ரீத் சிங் நடத்திய போட்டோஷூட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Rakul Preet Singh Photoshoot for Cuttputli OTT Release

31 வயதாகும் நடிகை ரகுல் ப்ரித் சிங், இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழில் கார்த்தியுடன் தேவ், தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களிலும், சூர்யாவுடன் NGK படத்திலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் அறியப்படுபவர்.

ரகுல் ப்ரீத் சிங், தற்போது சிவகார்த்திகேயனுடன் அயலான் படத்திலும், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படத்திலும் நடித்து வருகிறார்.

Rakul Preet Singh Photoshoot for Cuttputli OTT Release

சில மாதங்களுக்கு முன் நடிகை ரகுல் பிரித் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதலனுடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டு பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான ஜக்கி பக்னானியை காதலிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஜாக்கி பாக்னானி தமிழில் திரிஷாவுடன் மோகினி படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ரகுல் பிரித் சிங்கும் முக்கியமானவர்.

Rakul Preet Singh Photoshoot for Cuttputli OTT Release

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை 23 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கின்றனர். இந்நிலையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங், புதிய போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Rakul Preet Singh Photoshoot for Cuttputli OTT Release

அக்ஷய் குமார் & ரகுல் ப்ரித் சிங் நடிப்பில் இந்தியில் ரிலீஸ் ஆக உள்ள  கட்புட்லி படத்தின் ரிலீஸ் ப்ரோமோஷனுக்காக இந்த ஃபோட்டோஷூட்டை நடத்தி உள்ளார். இந்த கட்புட்லி திரைப்படம் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடியில் வரும் செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி வெளியாக உள்ளது.

Rakul Preet Singh Photoshoot for Cuttputli OTT Release

இந்த கட்புட்லி திரைப்படம், தமிழில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த ராட்சசன் படத்தின் இந்தி ரீமேக் ஆகும். விஷ்ணு விஷால் நடித்த அருண் கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடிக்கிறார். அமலா பால் நடித்த விஜி கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரித் சிங் நடித்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Rakul Preet Singh Photoshoot for Cuttputli OTT Release

People looking for online information on Akshay Kumar, Cuttputli, Rakul Preet Singh, Ratchasan will find this news story useful.