www.garudabazaar.com

TRENDING: மாலத்தீவில் இன்பச்சுற்றுலா.. நடிகை ரகுல் ப்ரீத் சிங் பகிர்ந்த டூர் போட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ரகுல் ப்ரீத் சிங் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

Actress Rakul Preet Singh Visit Maldives for Vacation Viral Photo

32 வயதாகும் நடிகை ரகுல் ப்ரித் சிங், இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழில் கார்த்தியுடன் தேவ், தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களிலும், சூர்யாவுடன் NGK படத்திலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் அறியப்படுபவர்.

இவர் தெலுங்கு & இந்தி சினிமாவிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர். ரகுல் ப்ரீத் சிங், தற்போது சிவகார்த்திகேயனுடன் அயலான் படத்திலும், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படத்திலும் நடித்து வருகிறார்.

Actress Rakul Preet Singh Visit Maldives for Vacation Viral Photo

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ரகுல் பிரித் சிங் முக்கியமானவர். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை 23 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கின்றனர்.

நடிகை ரகுல் ப்ரீத் சிங், சமீபத்தில் தனது பிறந்தநாளை காதலருடன் கொண்டாடினார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் காதலர் ஜாக்கி பாக்னானி கலந்து கொண்டார். சில மாதங்களுக்கு முன் நடிகை ரகுல் பிரித் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டு பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான ஜக்கி பக்னானியை காதலிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

Actress Rakul Preet Singh Visit Maldives for Vacation Viral Photo

ஜாக்கி பாக்னானி தமிழில் திரிஷாவுடன் மோகினி படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாலிவுட்டில் முன்னணி தயாரிப்பாளராக, நடிகராக வலம் வருபவர் தான் ஜாக்கி.

Actress Rakul Preet Singh Visit Maldives for Vacation Viral Photo

இந்நிலையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங், மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு கடற்கரை அருகில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியின் நீச்சல் குளத்தில் இருந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Actress Rakul Preet Singh Visit Maldives for Vacation Viral Photo

People looking for online information on Maldives, Rakul Preet Singh will find this news story useful.