Battery
The Legend
www.garudabazaar.com

மாலத்தீவில் இன்பச்சுற்றுலா சென்ற நடிகை வேதிகா.. இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட Vacation Photos

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை வேதிகா, மாலத்தீவில் இன்பச்சுற்றுலா சென்று புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Actress Vedhika Latest Maldives Vacation Photos

Also Read | திருச்சியில் நடிகர் அஜித்.. இதுக்கு தான் வந்திருக்காரா? முழு தகவலுடன் வைரல் ஃபோட்டோஸ்!

இந்தி உள்ளிட்ட இந்தியாவில் முன்னணி மொழிகளில் விளம்பர படங்களில் நடித்து பின் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை வேதிகா.

இவர் தமிழில் அர்ஜூன் நடித்த 'மதராஸி' படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். பின் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் நடித்து தென்னிந்தியாவில் முக்கிய கவனிக்கத்தக்க நடிகையாக வலம் வருபவர்.

Actress Vedhika Latest Maldives Vacation Photos

குறிப்பாக சரண் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த 'முனி' படத்தில் லாரன்ஸ்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானார், பின் சிம்புவுக்கு ஜோடியாக காளை படத்தில் நடித்தார். அந்த படத்தில் இவரது நடனம் குட்டிப்பிசாசு பாட்டில் இவரது நடனம் பரவலாக பாராட்டப்பட்டது.

அதன் பின் ஏ. ஆர் ரஹ்மான் இசையில் கலா பிரபு இயக்கத்தில் சக்கரக்கட்டி படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக நடித்தார். பின் பரதேசி படத்தில் இயக்குனர் பாலா இயக்கத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

Actress Vedhika Latest Maldives Vacation Photos

'பரதேசி' படத்தில் வேதிகாவின் நடிப்பிற்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் கிடைத்தன. பின் வசந்த பாலன் இயக்கத்தில்  காவியத்தலைவன் படத்தில் சித்தார்த், பிருதிவிராஜ் உடன் நடித்தார். இந்த படமும் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.

இன்ஸ்டாகிராமில் 3 மில்லியனுக்கும் மேல் ஃபாலோவர்களை வைத்துள்ள வேதிகா, சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்படும் நடிகைகளில் முக்கியமானவர். சமீபத்தில் அரபிக்குத்து பாடலுக்கு நடனம் ஆடி, மாலத்தீவில் இருந்து பிகினி படங்களளை வெளியிட்டு வைரலானார்.

Actress Vedhika Latest Maldives Vacation Photos

வேதிகா, கடந்த மாதம் கொரோனா தொற்றுக்கு உள்ளானார். இந்த செய்தியை ட்விட்டரில் பகிர்ந்து கடந்த இரண்டு நாட்களாக தனக்கு அதிக காய்ச்சல் இருப்பதாக தெரிவித்தார். தனது ரசிகர்களை முகக்கவசம் அணியுமாறு கேட்டுக் கொண்டார்.

தற்போது கொரோனாவில் இருந்து குணமாகி, மாலத்தீவில் சுற்றுலா சென்றுள்ளார். அங்குள்ள ஹெரிட்டன்ஸ் ஆரா விடுதியில் வேதிகா தங்கியுள்ளார். அங்கிருந்தபடியே புதிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Also Read | "உண்மைலயே வந்துருச்சாயா?" - "ஆமாயா.." - தேசிய விருது .. சூர்யா & சுதா பேசிக்கொண்டது என்ன?

Actress Vedhika Latest Maldives Vacation Photos

People looking for online information on Maldives Vacation, Vedhika, Vedhika Latest Maldives Vacation Photos will find this news story useful.