தன்னை ஹீரோவாக்கிய பிரபல தயாரிப்பாளரிடம் கொடுத்த வாக்கை காப்பாற்றிய சூப்பர் ஸ்டார்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லைக்கா புரொடக்ஷன் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் தற்போது தர்பார் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். அனிருத் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

Rajinikanth builds a house for his Bhairavi film producer Kalaignanam

சந்தோஷ் சிவன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ்,  யோகி பாபு, ஸ்ரீமன், பேபி மானஸ்வி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.  இந்த படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் முதன் முதலில் சோலோ ஹீரோவாக நடித்த படம் பைரவி. இந்த படத்தை கலைஞானம் தயாரித்திருந்தார். இயக்குநர் பாராதிராஜா கலைஞானத்துக்கு நடித்திய பாராட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய சூப்பர் ஸ்டார், கலைஞானத்துக்கு வீடு தருவதாக அறிவித்தார். அவர் அறிவித்தபடி சென்னையில் ரூ.45 லட்சம் மதிப்புள்ள வீடு வழங்கியுள்ளாராம்.