Super Hot-Breaking - ‘தர்பார்’ டீமின் மாஸ்டர் பிளான் என்ன தெரியுமா?
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Sep 25, 2019 04:04 PM
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தர்பார்’ திரைப்படத்தின் அடுத்தக்கட்ட ஷூட்டிங் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.

‘பேட்ட’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தர்பார்’ திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.
மேலும், யோகிபாபு, ஜட்டின் சர்னா, பிரதீப் கப்ரா, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் ‘தர்பார்’ படத்திற்கு ரஜினியின் ‘தளபதி’(1991) பிறகு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தின் வெளிநாடு வெளியீட்டு உரிமத்தை ஃபார்ஸ் ஃபிலிம் என்ற நிறுவனம் அதிகபட்சமாக ரூ.35 கோடிக்கு வாங்கியுள்ளது. சமீபத்தில் வெளியான ‘தர்பார்’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டரில் சூப்பர் ஸ்டாரின் மாஸான கெட்டப்பை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர்.
இந்நிலையில், இன்று (செப்.25) இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் பிறந்தநாளையொட்டி ‘தர்பார்’ படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், இப்படத்தின் அடுத்தக்கட்ட ஷூட்டிங் பிளான் குறித்த தகவல் நமக்கு கிடைத்துள்ளது.
இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் பணிகள் மும்பையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், அடுத்த மாதம் தர்பார் படக்குழு லண்டன் செல்ல திட்டமிட்டுருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.