'பொது மொழி இருந்தால் நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது ஆனால்...' - ரஜினிகாந்த் கருத்து
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 18, 2019 02:59 PM
கடந்த வாரம் உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், நாட்டின் மொதுமொழியாக ஹிந்தி இருந்தால் இந்தியாவை உலக அளவில் அடையாளப்படுத்த முடியும். ஹிந்தி மொழியை மக்கள் அடிக்கடி பயன்படுத்த வேண்டும் என்றார்.
அமித்ஷாவின் கருத்துக்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரையுலகினரில் ஒரு சிலர் கடுமையாக எதிர்த்தனர். நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வீடியோ மூலம் கண்டனம் தெரிவித்தார்.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், ''பேனர் வைக்கக் கூடாது என்று நீண்ட நாட்களுக்கு முன்பே ரசிகர்களிடம் தெரிவித்து விட்டேன். இந்தியா மட்டும் அல்ல எந்த நாடாக இருந்தாலும் பொதுமொழி இருந்தால், அது அந்த நாட்டின் முன்னேற்றத்திற்கு, ஒற்றுமைக்கு, வளர்ச்சிக்கு நல்லது.
ஆனால் துரதிர்ஷடவசமாக நம் நாட்டில் பொது மொழி கொண்டு வர முடியாது. அதனால் நம் நாட்டில் எந்த மொழியையும் திணிக்கமுடியாது. ஹிந்தி மொழியைத் திணித்தால் தென்னிந்தியாவில் மட்டுமல்ல, வட இந்தியாவில் பல மாநிலங்களில் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்'' என்று தெரிவித்தார்.