''ஷூட்டிங் முடிச்சுட்டேன்'' - சூப்பர் ஸ்டாரின் தர்பார் குறித்து பிரபல நடிகர் மகிழ்ச்சி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்து வரும் படம் தர்பார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

Sriman about Rajinikanth, Anirudh, Nayanthara's Darbar

பேட்ட படத்துக்கு சூப்பர் ஸ்டாருடன் அனிருத் இணைவதால் இந்த படத்தின் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், இந்த படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், ஸ்ரீமன், பேபி மானஸ்வி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

லைக்கா புரொடக்ஷன் சார்பாக சுபாஷ்கரன் தயாரித்துள்ள இந்த படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.  இந்நிலையில் இந்த படம் குறித்து நடிகர் ஸ்ரீமன் தனது ட்விட்டர் பக்கத்தில், 'தர்பார்' படத்தின் எனது பணியை முடித்துவிட்டேன்.

சூப்பர் ஸ்டாருடன் நடிப்பதற்கு நீண்ட வருடங்கள் ஆகிவிட்டது. கடவுளுக்கு நன்றி. ரஜினி சாரிடம் இருந்து பாராட்டுக்களையும் ஆசிர்வாதத்தையும் பெற்றேன். இதற்கு முழுமையான காரணம் இயக்குநர் முருகதாஸ். தீனாவிற்கு பிறகு தர்பாரில் பணிபுரிந்துள்ளேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.