தலைவர் பராக்!! - தர்பாருக்கு Bye Bye சொன்ன ரஜினிகாந்த்!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Oct 04, 2019 10:59 AM
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தர்பார்’ திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகளை முடித்துவிட்டு ரஜினிகாந்த் சென்னை திரும்பியுள்ளார்.
‘பேட்ட’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தர்பார்’ திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும், யோகிபாபு, ஜட்டின் சர்னா, பிரதீப் கப்ரா, நிவேதா தாமஸ், பேபி மானஸ்வி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் ‘தர்பார்’ படத்திற்கு ரஜினியின் ‘தளபதி’(1991) பிறகு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தின் வெளிநாடு வெளியீட்டு உரிமத்தை ஃபார்ஸ் ஃபிலிம் என்ற நிறுவனம் அதிகபட்சமாக ரூ.35 கோடிக்கு வாங்கியுள்ளது. சமீபத்தில் வெளியான ‘தர்பார்’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டரில் சூப்பர் ஸ்டாரின் மாஸான கெட்டப்பை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தர்பார் திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகளை நிறைவு செய்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ரஜினிகாந்துடன் படக்குழுவினர் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூல வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் மும்பை மற்றும் ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படம் 2020ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவிருக்கிறது.