''அவர் தர்பாரின் மர்ம மனிதர்'' - சூப்பர் ஸ்டார் குறித்து தர்பார் பிரபலம் கருத்து

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லைக்கா புரொடக்ஷன் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து உருவாகி வரும் படம் 'தர்பார்'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

Santosh Sivan tweets About Rajinikanth and Darbar

தளபதிக்கு பிறகு ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்  சூப்பர் ஸ்டாருடன் இந்த படம் மூலம் இணைந்துள்ளார். இந்த படத்தில் நயன்தார, நிவேதா தாமஸ், யோகிபாபு, ஸ்ரீமன், பேபி மானஸ்வி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு திரைக்கு வர விருப்பதாக கூறப்படுகிறது.  இந்நிலையில் ஒளிப்பதிவாளர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஃபோட்டோவை பகிர்ந்திருந்தார். அந்த பதிவில், அவர் மர்மமான மனிதர். அவர் உண்மையாவே ஸ்பெஷல் என்று குறிப்பிட்டுள்ளார்.