'தர்பார்' Shooting spot-ல் மனைவி லதாவுடன் ரொமான்டிக் லுக்கில் சூப்பர் ஸ்டார் !
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 30, 2019 03:59 PM
லைக்கா புரொடக்ஷன் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் 'தர்பார்'. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் எழுதி இயக்க, அனிருத் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்த படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், நவாப் ஷா, யோகி பாபு, ஸ்ரீமன், பேபி மானஸ்வி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்த படம் வருகிற 2020 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போலீஸ் உடையில் தனது மனைவி லதா ரஜினிகாந்துடன் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
Tags : Darbar, Rajinikanth, Nayanthara, Anirudh Ravichander