'தலைவருடன் அரசியல் படமா?' - இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Oct 04, 2019 12:30 PM
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்காக தயார் செய்து வைத்திருக்கும் கதை குறித்து இயக்குநர் வெற்றிமாறன் மனம் திறந்துள்ளார்.
'வட சென்னை' படத்துக்கு வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'அசுரன்' திரைப்படம் இன்று(அக்.4) உலகம் முழுவதும் ரிலீசாகி வரவேற்பை பெற்று வருகிறது. கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தில் தனுஷுடன் மஞ்சு வாரியர், பிரகாஷ் ராஜ், பாலாஜி சக்திவேல், கென், டிஜே உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், Behindwoods-ன் Personals வித் தாரா நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு இயக்குநர் வெற்றிமாறன் பிரத்யேக பேட்டியளித்தார். அதில், ‘அசுரன்’ திரைப்படம் பற்றியும், அதன் ஷூட்டிங் அனுபவம் குறித்தும், தனது அடுத்தடுத்த திட்டங்கள் குறித்தும் இயக்குநர் வெற்றிமாறன் பகிர்ந்துக் கொண்டார்.
அசுரன் குறித்து பேசுகையில், குடும்ப டிராமா படமான அசுரன் படத்தில் எமோஷன்ஸ் மற்றும் ஆழமான பல விஷயங்கள் இருப்பதாகவும், இப்படம் தனுஷின் கெரியரில் முக்கிய இடம் பெறும் என்றும் கூறினார். மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்காக தயார் செய்து வைத்திருக்கும் அரசியல் படம் நடக்குமா? என்ற கேள்விக்கு பதிலளித்த வெற்றிமாறன், “இல்லை அது நடக்காது” என்றார்.
அதேபோல், தளபதி விஜய்க்காக தயார் செய்து வைத்துள்ள ஸ்க்ரிப்ட் குறித்து பேசுகையில், “அது பற்றி எதுவும் தெரியவில்லை” என்றார். மேலும், சூரியுடன் இணையவிருக்கும் படம் பற்றி பேசிய அவர், “நா.முத்துக்குமாரின் கவிதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதை தான் அது. சூரியை நாயகனாக அறிமுகம் செய்ய இந்த கதை சரியாக இருக்கும். மேலும், கதைக்கும் சூரி பொறுத்தமாக இருப்பார்” என வெற்றிமாறன் தெரிவித்தார்.
'தலைவருடன் அரசியல் படமா?' - இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம் வீடியோ