“வந்துட்டேன்னு சொல்லு...!” - பிக் பாஸ் முடிந்து ஷெரின் பகிர்ந்த முதல் ட்வீட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி ரசிகர்களிடையே பேராதரவை பெற்றது. குறிப்பாக இந்நிகழ்ச்சியில் காதல், பாசம், சண்டைகள் என நாளுக்கு நாள் பரபரப்பாகவே இருந்தது.

Sherin Shringar First Tweet After Bigg Boss 3 Tamil Vijay tv

மேலும் இந்த சீசனில் மதுமிதா, சரவணன் விதிகளை மீறியதால் அதிரடியாக வெளியேறியது,கவின் - லாஸ்லியா, முகேன் - அபிராமி, தர்ஷன் - ஷெரின் உள்ளிட்டோரிடையேயான காதல் விவகாரங்கள், சேரனின் மகள் பாசம் என பெரிதும் சமூகவலைதளங்களில் பெரிதாக விவாதிக்கப்பட்டது.

ஒருவழியாக இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்றோடு முடிவடைந்துள்ளது. இறுதிப்போட்டியாளர்களான முகேன், சாண்டி, ஷெரின், லாஸ்லியாவில் முகேன் பிக்பாஸ் வின்னராக அறிவிக்கப்பட்டார். சாண்டி இரண்டாமிடமும், லாஸ்லியா மூன்றாமிடமும் பிடித்தனர். பிக்பாஸ் வீட்டை விட்டு வந்த பின் ஷெரின் முதன் முதலாக பதிவிட்டுள்ளார். இதில் அனைவரின் ஆதரவிற்கும், அன்பிற்கும் நன்றி கொடுத்துள்ளார்.