ஆல்யா கர்ப்பமாக இருக்கும் படத்தை வெளியிட்டு சஞ்சீவ் உருக்கம் - ''நீங்க தான் என் வாழ்க்கை''
முகப்பு > சினிமா செய்திகள்விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ராஜா ராணி' தொடர் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான ஆல்யா மானஸா மற்றும் சஞ்சீவ் கார்த்திக். இருவரும் திருமணம் செய்து கொண்டதாக கடந்த செப்டம்பரில் சஞ்சீவ் கார்த்திக் அறிவித்தார்.

தற்போது கர்ப்பமாக இருக்கும் ஆல்யாவிற்கு கடந்த ஜனவரி மாதம் வளைகாப்பு நடந்தது. இதனை வீடியோவாக சஞ்சீவ் வெளியிட, அது சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும் அவ்வப்போது ஆல்யா மானஸாவுடன் அவர் பகிர்ந்து வரும் புகைப்படங்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது.
தற்போது சஞ்சீவ் மட்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'காற்றின் மொழி' சீரியலில் நடித்து வருகிறார். இந்த தொடரும் 'ராஜா ராணி' தொடரைப் போலவே சஞ்சீவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது.
இந்நிலையில் சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆல்யா மானஸாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். ஆல்யா மானஸா கர்ப்பமாக இருக்கும் நிலையில், ''நீங்கள் தான் என்னோட வாழ்க்கை'' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவிற்கு ஆல்யா மற்றும் சஞ்சீவை வாழ்த்தி ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.