சிவகார்த்திகேயன் குறித்து 'டாக்டர்' இயக்குநர் ட்வீட் - ''மெரட்டி பண்ண சொல்றிங்க, பரவால்ல...''
முகப்பு > சினிமா செய்திகள்'கோலமாவு கோகிலா' படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயனை ஹீரோவாக வைத்து 'டாக்டர்' படத்தை இயக்கிவருகிறார் நெல்சன் திலீப்குமார். சிவகார்த்திகேயன் பிறந்த நாளை முன்னிட்டு இன்று (பிப்ரவரி 17) 'டாக்டர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த படத்தில் சிவகார்த்திகேயன், இயக்குநர் நெல்சனிடம் கை நீட்டியபடி ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார். அந்த பதிவில், ''பிறந்த நாள் வாழ்த்துகள் சகோ மற்றும் ஃபிரெண்ட் சிவகார்த்திகேயன். (மெரட்டி வாழ்த்து போட வைக்குறீங்க பரவால்ல)'' என்று தெரிவித்துள்ளார்.
'டாக்டர்' படத்தில் சிவகார்த்திகேயனுடன் பிரியங்கா மோகன் நடிக்க, வினய் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தை சிவகார்த்திகேயன் புரொடக்சன் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் தயாரிக்கின்றன.
A verryyyy happy birthday my brother and friend @Siva_Kartikeyan 🤗🤗😘😘💐💐💐 have a great year and god bless 🤗 (merati vazhthu poda vaikureenga, paravaila) pic.twitter.com/23jE8owXP9
— Nelson Dilipkumar (@Nelson_director) February 17, 2020