தம்பியின் கல்யாணத்தில் வைரலாகும் சிம்புவின் புதுலுக்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு, 'வந்தா ராஜவாதான் வருவேன்' படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் சிம்புவுடன் மேகா ஆகாஷ், கேத்ரின் தெரஸா, யோகிபாபு, ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

Simbu's New Look in His brother's Kuralarasan's Marriage

அதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபுவின்' மாநாடு' படத்தில் நடிக்கவுள்ளார்.  இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கவிருக்கிறார்.  இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.  இந்த படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.

இந்த படத்துக்காக லண்டனில் பயிற்சி செய்துகொண்டிருப்பதாக செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன. தற்போது  ஏப்ரல் 26 ஆம் தேதி இவரது சகோதரர் குரளரசனின் திருமணத்தில் கலந்துகொணடுள்ளார். அதில் அவரது சகோதரருடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலாகிவருகிறது.