www.garudabazaar.com

வெங்கட் பிரபு இயக்கும் புதிய திரைப்படம்.. இணைந்த பிரபல தமிழ் காமெடி நடிகர்! இவரா? ஜாலி தான்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வெங்கட் பிரபு இயக்கும் புதிய திரைப்படத்தில் பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் இணைந்துள்ளார்.

Premji Amaren On Board for Venkat Prabhu Naga Chaitanya Movie

Also Read | நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ஜெயிலர்.. வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் BTS புகைப்படங்கள்!

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் தேதி, சிம்பு நடிப்பில் மாநாடு திரைப்படம் வெளியாகி இருந்தது.டைம் லூப் கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தை அனைத்து தரப்பிலான மக்களுக்கும் புரியும் வகையில், நேர்த்தியாக இயக்கி இருந்தார் வெங்கட் பிரபு.

மாநாடு திரைப்படமும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று, 117 கொடி ரூபாய் வசூல் செய்து பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. இதனையடுத்து, மிகவும் குறுகிய காலத்தில், நடிகர் அசோக் செல்வனை வைத்து அவர் இயக்கிய மன்மத லீலை திரைப்படமும், கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியாகியது.

Premji Amaren On Board for Venkat Prabhu Naga Chaitanya Movie

அடுத்ததாக தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவுடன்  வெங்கட் பிரபு இணையும் இருமொழி படம் குறித்த அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளிவந்தது. வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகும் 11 ஆவது திரைப்படம் இதுவாகும். அதே போல, தெலுங்கில் அவர் இயக்கும் முதல் படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பாளர் ஶ்ரீனிவாச சித்துரி, Srinivasaa Silver Screens சார்பில் தயாரிக்கும் இந்த படத்தினை பவன் குமார் வழங்குகிறார். நாகசைதன்யா தமிழில் நடிக்கும் முதல் படம் இதுவாகும்.

Premji Amaren On Board for Venkat Prabhu Naga Chaitanya Movie

கடந்த ஜூன் 23 ஆம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.  தெலுங்கில் இப்பூஜையை போயபத்தி ஶ்ரீனு கிளாப் அடித்து துவக்கி வைத்தார். கேமராவை ராணா ஆன் செய்தார். தமிழில் இயக்குனர் இமயம் பாரதிராஜா கிளாப் அடித்து துவக்கி வைத்தார். நடிகர் சிவகார்த்திகேயன் கேமராவை ஆன் செய்தார்.

Premji Amaren On Board for Venkat Prabhu Naga Chaitanya Movie

இப்படத்தில் இளையராஜா - யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைக்க உள்ளனர். இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக பிரபல முன்னணி ஒளிப்பதிவாளர் S.R. கதிர் இணைந்துள்ளார்.

Premji Amaren On Board for Venkat Prabhu Naga Chaitanya Movie

இந்த படத்தில் வில்லனாக  பிரபல தமிழ் நடிகர் அரவிந்த்சாமி நடிக்க இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க நடிகை கீர்த்தி ஷெட்டி ஒப்பந்தமாகி உள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் பிரபல நடிகை பிரியா மணி நடிக்க உள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆரண்ய காண்டம், கோவா, அசல், ஜில்லா படங்களில் நடித்துள்ள நடிகர் சம்பத், தெலுங்கு காமெடி நடிகர் வெண்ணிலா கிஷோர், வெங்கட் பிரபுவின் தம்பி பிரேம்ஜி அமரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக பிரத்யேக போஸ்டருடன் அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | சோனாக்ஷி சின்ஹா & ஹூமா குரேஷி நடிக்கும் இந்தி படம்.. களமிறங்கிய சிம்பு! முழு தகவல்

Premji Amaren On Board for Venkat Prabhu Naga Chaitanya Movie

People looking for online information on Naga chaitanya, NC22, Premji amaren, Priyamani, Venkat Prabhu will find this news story useful.