www.garudabazaar.com

சோனாக்ஷி சின்ஹா & ஹூமா குரேஷி நடிக்கும் இந்தி படம்.. களமிறங்கிய சிம்பு! முழு தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சோனாக்ஷி சின்ஹா & ஹூமா குரேஷி நடிக்கும் புதிய இந்தி படத்திற்காக சிம்பு களமிறங்கி உள்ளார்.

Silambarasan TR sung a song in Hindi film double xl

Also Read | BREAKING: விக்ரம் & பா. ரஞ்சித் இணையும் புதிய படம்.. ஆரம்பமே அதிரடி தான்! வேறமாரி அப்டேட்

இயக்குனர் சத்ரம் ரமணி இயக்கத்தில்,  முதாஸ்ஸர் அஜிஸ் கதை, திரைக்கதை எழுதி தயாரிக்கும், டபுள் எக்ஸ் எல் திரைப்படத்தில் . நடிகை ஹூமா குரேஷியுடன் சோனாக்ஷி சின்ஹா நடித்துள்ளார்.

இந்த படத்தில் ஷிகர் தவான் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் ஷிகர் தவானின் முதல் லுக் ஸ்டில்லும் சில நாட்களுக்கு முன் வெளியாகி உள்ளது. இதனை ஹூமா குரேஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.

மங்காத்தா புகழ் நடிகர் மஹத் ராகவேந்திரா, இப்படத்தில் நடிகர் ஜாஹிர் இக்பாலுடன் இணைந்து மற்றொரு நாயகனாக நடிக்கின்றார்.  சோனாக்‌ஷி சின்ஹா, ஹீமா குரேஷி ஆகியோர் இப்படத்தில் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Silambarasan TR sung a song in Hindi film double xl

லண்டனில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

நேற்று முன்தினம் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. மேலும் வரும் நவம்பர் மாதம் 4 ஆம் தேதி திரையரங்குகளில் இந்த படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Silambarasan TR sung a song in Hindi film double xl

இந்நிலையில் இந்த படத்தின் தாலி தாலி எனும் பாடலை நடிகர் சிம்பு தனது சொந்த குரலில் பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது வெளியாகி உள்ளது.

மஹத் ராகவேந்திரா,  ஜாஹிர் இக்பாலுடன் இணைந்து சோனாக்‌ஷி சின்ஹா, ஹீமா குரேஷி நடனம் ஆடும் வீடியோ காட்சிகள் இந்த பாடலில் அமைந்துள்ளது.

சிம்பு பாடியுள்ள முதல் இந்தி பாடல் இதுவாகும்.

 

Also Read | நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ஜெயிலர்.. வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் BTS புகைப்படங்கள்!

தொடர்புடைய இணைப்புகள்

Silambarasan TR sung a song in Hindi film double xl

People looking for online information on Double xl, Hindi film, Silambarasan TR, Silambarasan TR sung a song in Hindi film will find this news story useful.