www.garudabazaar.com

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ஜெயிலர்.. வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் BTS புகைப்படங்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர்  படத்தின் BTS புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Rajinikanth Jailer Movie BTS Azhagiya Natham Village Cuddalore

Also Read | PS1: வெளியான 'சோழா சோழா' பாடல் வீடியோ.. விக்ரமின் தெறி மாஸ் PERFORMANCE!

அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169வது படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். சன்பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

Rajinikanth Jailer Movie BTS Azhagiya Natham Village Cuddalore

இப்படத்தின் டைட்டில் லுக் & ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளது. இப்படத்துக்கு 'ஜெயிலர்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் சென்னையில் துவங்கியது. சென்னை ஆதித்ய ராம் ஸ்டூடியோ, மகாபலிபுரத்தில் நடந்த முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கி உள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Rajinikanth Jailer Movie BTS Azhagiya Natham Village Cuddalore

இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். பிரபல சண்டைப் பயிற்சி இயக்குனர் ஸ்டன் சிவா  ஜெயிலர் படத்தில் சண்டைக்காட்சி இயக்குனராக பணிபுரிகிறார். மேலும் பல்லவி சிங் ஜெயிலர் படத்தில் ஸ்டைலிஸ்ட் & ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிகின்றார்.

Rajinikanth Jailer Movie BTS Azhagiya Natham Village Cuddalore

இந்த படத்தின் தற்போதைய படப்பிடிப்பு கடலூர் மாவட்டத்தில் உள்ள அழகிய நத்தம் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரையில் நடைபெற்று வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. படப்பிடிப்பில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சனின் BTS புகைப்படங்கள் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

Also Read | BREAKING: விக்ரம் & பா. ரஞ்சித் இணையும் புதிய படம்.. ஆரம்பமே அதிரடி தான்! வேறமாரி அப்டேட்

தொடர்புடைய இணைப்புகள்

Rajinikanth Jailer Movie BTS Azhagiya Natham Village Cuddalore

People looking for online information on Jailer, Nelson, Nelson Dilipkumar, Rajinikanth, Rajinikanth Jailer Movie BTS, Super Star Rajinikanth will find this news story useful.