Naane Varuven M Logo Top
www.garudabazaar.com

வெங்கட் பிரபு - நாகசைதன்யா இணையும் புதிய படம்.. வெளியான அதிரடி அப்டேட்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிம்புவை வைத்து கடந்த ஆண்டு மாநாடு படத்தை இயக்கி இருந்தவர் இயக்குனர் வெங்கட் பிரபு.

Venkat prabhu and nagachaitanya new movie shooting update

Also Read | Video: “கோடி ரூபா கொடுத்தாலும் அது மட்டும் நோ..”.. ராமராஜனின் கம்பேக் படம் ‘சாமானியன்’!

டைம் லூப் கதையம்சம் கொண்ட இந்த திரைப்படம், கடந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் சிறந்த திரைப்படமாகவும் பதிவாகி இருந்தது.

மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து, அசோக் செல்வன் நாயகனாக நடித்திருந்த மன்மத லீலை திரைப்படத்தையும் வெங்கட் பிரபு இயக்கி இருந்தார்.

இதற்கு அடுத்தபடியாக, தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை வைத்து புதிய திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளார் வெங்கட் பிரபு. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த திரைப்படம் தொடர்பான அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது. வெங்கட் பிரபு இயக்கும் 11 ஆவது திரைப்படம் இதுவாகும். மேலும், தெலுங்கில் அவர் இயக்கும் முதல் திரைப்படம் இது தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Venkat prabhu and nagachaitanya new movie shooting update

நாகசைதன்யாவின் நடிப்பில் 22 ஆவது படமாக இது உருவாக உள்ள நிலையில், தயாரிப்பாளர் ஶ்ரீனிவாச சித்துரி, Srinivasaa Silver Screens சார்பில் தயாரிக்கிறார். மேலும் இந்த படத்தினை பவன் குமார் வழங்குகிறார்.

Venkat prabhu and nagachaitanya new movie shooting update

இந்நிலையில், வெங்கட் பிரபு - நாகசைதன்யா இணையும் படம் தொடர்பாக தற்போது அதிரடியான அப்டேட் ஒன்று வெளி வந்துள்ளது. "NC22" என இந்த படத்திற்கு தற்போது பெயரிடப்பட்டுள்ள நிலையில், இதன் படப்பிடிப்பு நாளை (21.09.2022) ஆரம்பமாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Venkat prabhu and nagachaitanya new movie shooting update

முன்னதாக இந்த படத்தின் பூஜையும் சமீபத்தில் நடைபெற்றிருந்தது. 'NC22' படத்தில் நாயகியாக நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்க உள்ள நிலையில், இசைஞானி இளையராஜா மற்றும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் இணைந்து இசையமைக்க உள்ளனர்.

Also Read | பிரியங்கா மோகனை தொடர்ந்து.. தனுஷ் படத்தில் இணைந்த பிரபல இளம் நடிகை!!

Venkat prabhu and nagachaitanya new movie shooting update

People looking for online information on Naga chaitanya, Naga Chaitanya New Movie, Venkat Prabhu will find this news story useful.