o2

வெங்கட் பிரபு - நாகசைதன்யா படத்தில் இணைந்த பிரபல இசையமைப்பாளர்கள்.. 'அதிரடி' அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் நாகசைதன்யா நடித்து வரும் புதிய படத்தின் இசை அமைப்பாளர்கள் யார் என்பது பற்றி அசத்தல் அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.

Ilaiyaraaja and yuvanshankar raja to compose venkat prabhu next

Also Read | Photo: அஜித்குமாரின் AK61 பட ஷூட்டிங்.. வெளியான மஞ்சு வாரியரின் செம்ம சூப்பர் லுக்!

கடந்த ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த படம், "மாநாடு".  இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். இதனைத் தொடர்ந்து, அசோக் செல்வன் நடிப்பில் வெளியான மன்மத லீலை படத்தையும் வெங்கட் பிரபு இயக்கி இருந்தார்.

இதன் பின்னர், பிரபல தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவுடன், வெங்கட் பிரபு இணையும் திரைப்படம் குறித்த  அதிகாரபூர்வ அறிவிப்பும், சமீபத்தில் வெளியாகி இருந்தது.

வெங்கட் பிரபு - நாகசைதன்யா

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக உள்ள இந்த திரைப்படத்தினை தயாரிப்பாளர் ஶ்ரீனிவாச சித்துரி, Srinivasaa Silver Screens சார்பில் தயாரிக்கிறார். மேலும், நாகசைதன்யா தமிழில் நடிக்கும் முதல் படம் இதுவாகும். வெங்கட் பிரபு இயக்கும் படங்கள் என்றாலே, அதிக ஜனரஞ்சகமான பொழுது போக்கு படமாக இருக்கும். அந்த வகையில், நாகசைதன்யாவை வைத்து வெங்கட் பிரபு இயக்கும் படத்தின் மீதும் பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது.

Ilaiyaraaja and yuvanshankar raja to compose venkat prabhu next

நாயகியாக கீர்த்தி ஷெட்டி

இதனைத் தொடர்ந்து, படக்குழு குறித்த தகவல் எதுவும் வெளி வராமல் இருந்து வந்த நிலையில், இன்று சில அதிகாரபூர்வ அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நாயகியாக நடிக்க பிரபல தெலுங்கு இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி ஒப்பந்தமாகி உள்ளார். இந்நிலையில், படத்தின் இசை அமைப்பாளர்கள் பற்றியும், தற்போது அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Ilaiyaraaja and yuvanshankar raja to compose venkat prabhu next

இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா

இசைஞானி இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் இணைந்து, வெங்கட் பிரபு - நாகசைதன்யா இணையும் படத்திற்கு இசையமைக்க உள்ளனர். வெங்கட் பிரபுவின் பெரும்பாலான படங்களுக்கு யுவன் ஷங்கர் ராஜா தான் இசையமைத்துள்ளார். அதே வேளையில், வெங்கட் பிரபு படத்திற்கு இளையராஜா இசையமைக்க உள்ளது இது தான் முதல் முறை.

Ilaiyaraaja and yuvanshankar raja to compose venkat prabhu next

மேலும், இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் இணைந்து இசையமைக்கும் இரண்டாவது படம் (மாமனிதன் படத்திற்கு பிறகு) இது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே போல, தெலுங்கில் இயக்குனராக அறிமுகம் ஆகும் வெங்கட் பிரபுவிற்கு, தெலுங்கிலேயே வாழ்த்துக்களைக் கூறி, வீடியோ ஒன்றையும் இளையராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Also Read | வாரிசு 3rd look.. "அட, விஜய் அமர்ந்திருக்கும் Bike-ல இப்படி ஒரு ஸ்பெஷல் இருக்கா?"

தொடர்புடைய இணைப்புகள்

Ilaiyaraaja and yuvanshankar raja to compose venkat prabhu next

People looking for online information on Ilaiyaraaja, Krithi Shetty, Naga chaitanya, Venkat Prabhu, Yuvan Shankar Raja will find this news story useful.