www.garudabazaar.com

BREAKING: நாக சைதன்யா & வெங்கட் பிரபு இணையும் புதிய படத்தில் இணைந்த பிரபல நடிகை! செம்ம

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வெங்கட் பிரபு இயக்கும் புதிய திரைப்படத்தில் பிரபல நடிகை இணைந்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Priyamani joins in NC22 with Nagachaitanya directed by Venkat Prabhu

Also Read | காதலருடன் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.. லண்டனில் பிறந்தநாள் கொண்டாடிய வைரல் வீடியோ!

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் தேதி, சிம்பு நடிப்பில் மாநாடு திரைப்படம் வெளியாகி இருந்தது.டைம் லூப் கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தை அனைத்து தரப்பிலான மக்களுக்கும் புரியும் வகையில், நேர்த்தியாக இயக்கி இருந்தார் வெங்கட் பிரபு.

மாநாடு திரைப்படமும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று, 117 கொடி ரூபாய் வசூல் செய்து பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. இதனையடுத்து, மிகவும் குறுகிய காலத்தில், நடிகர் அசோக் செல்வனை வைத்து அவர் இயக்கிய மன்மத லீலை திரைப்படமும், கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியாகியது.

Priyamani joins in NC22 with Nagachaitanya directed by Venkat Prabhu

அடுத்ததாக தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவுடன்  வெங்கட் பிரபு இணையும் இருமொழி படம் குறித்த அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளிவந்தது. வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகும் 11 ஆவது திரைப்படம் இதுவாகும். அதே போல, தெலுங்கில் அவர் இயக்கும் முதல் படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பாளர் ஶ்ரீனிவாச சித்துரி, Srinivasaa Silver Screens சார்பில் தயாரிக்கும் இந்த படத்தினை பவன் குமார் வழங்குகிறார். நாகசைதன்யா தமிழில் நடிக்கும் முதல் படம் இதுவாகும்.

Priyamani joins in NC22 with Nagachaitanya directed by Venkat Prabhu

கடந்த ஜூன் 23 ஆம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.  தெலுங்கில் இப்பூஜையை போயபத்தி ஶ்ரீனு கிளாப் அடித்து துவக்கி வைத்தார். கேமராவை ராணா ஆன் செய்தார். தமிழில் இயக்குனர் இமயம் பாரதிராஜா கிளாப் அடித்து துவக்கி வைத்தார். நடிகர் சிவகார்த்திகேயன் கேமராவை ஆன் செய்தார்.

Priyamani joins in NC22 with Nagachaitanya directed by Venkat Prabhu

இப்படத்தில் இளையராஜா - யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைக்க உள்ளனர். இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக பிரபல முன்னணி ஒளிப்பதிவாளர் S.R. கதிர் இணைந்துள்ளார்.

Priyamani joins in NC22 with Nagachaitanya directed by Venkat Prabhu

இந்த படத்தில் வில்லனாக  பிரபல தமிழ் நடிகர் அரவிந்த்சாமி நடிக்க இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க நடிகை கீர்த்தி ஷெட்டி ஒப்பந்தமாகி உள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் பிரபல நடிகை பிரியா மணி நடிக்கிறார் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரியா மணி, தமிழில் மலைக்கோட்டை, பருத்தி வீரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தில் பிரியாமணி நடித்து வருகிறார்.

Also Read | இந்திய அளவில் ரசிகர்களை கவரும் "காந்தாரா".. வெளியான மிரட்டலான தமிழ் டிரெய்லர்!

Priyamani joins in NC22 with Nagachaitanya directed by Venkat Prabhu

People looking for online information on Naga chaitanya, NC22, Priyamani, Venkat Prabhu will find this news story useful.