Maha
www.garudabazaar.com

'லால்சிங் சத்தா' பட நாக சைதன்யாவின் கேரக்டர் லுக்... வெளிவந்த சூப்பரான தமிழ் போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லால்சிங் சத்தா படத்தின் நாக சைதன்யா கதாபாத்திரத்தின் கேரக்டர் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

Naga Chaitanya as Balaraju in Laal Singh Chaddha Movie

Also Read | பிரபல போட்டோகிராபருடன் போட்டோ ஷூட்.. அசத்திய KGF புகழ் ஶ்ரீநிதி ஷெட்டி!

ஆமிர் கான் நடிப்பில் FORREST GUMP படத்தின் ரீமேக் ஆன லால் சிங் ஷத்தா படம் ஆகஸ்ட் 11 அன்று ரிலிசாகிறது.

1994 ஆம் ஆண்டு வெளியான FORREST GUMP திரைப்படத்தை ராபர்ட் ஜெமிக்ஸ் இயக்கினார். இவர் 'Back to the Future' சீரிஸ் படங்களை இயக்கிவர், 677 மில்லியன் டாலர் வசூல் செய்து 13 ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு, 6 ஆஸ்கர் விருதுகளை வாங்கிய படம் இது.

சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர் உள்ளிட்ட 6 ஆஸ்கர் விருதுகளைக் குவித்தது.

Naga Chaitanya as Balaraju in Laal Singh Chaddha Movie

டாம் ஹாங்க்ஸ் நடித்த FORREST GUMP கதாபாத்திரத்தில் ஆமீர் கான்  நடிக்கிறார்.  ஆமீர் கானுடன் கரினா கபூர் கதாநாயகியாக ராபின் ரைட் பாத்திரத்தில் நடிக்கிறார். விஜய் சேதுபதிக்கு மாற்றாக நாக சைதன்யா முக்கிய ராணுவ வீரர் வேடத்தில் நடிக்கிறார். அத்வைத் சந்தன் இந்த படத்தை இயக்க, அமீர் கானே தனது நிறுவனம் வழியாக தயாரித்துள்ளார்.

இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் நாக சைதன்யா கதாபாத்திரத்தின் கேரக்டர் லுக் தமிழ் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. பாலராஜூ எனும் கதாபாத்திரத்தில் நாக சைதன்யா ராணுவ வீரனாக நடித்துள்ளார். ஒரு உண்மையான நண்பன் ஆயிரம் போர் வீரர்களுக்கு சமம் என்ற சொற்றொடருடன் போஸ்டர் வெளியாகி உள்ளது.

Naga Chaitanya as Balaraju in Laal Singh Chaddha Movie

ஏற்கனவே இந்த படத்தில் ரூபா எனும் கதாபாத்திரத்தில் நடிகை கரீனா கபூர் நடிப்பதாகவும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த படம் கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது, பின் படத்தின் வெளியீட்டை 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கு படக்குழு ஒத்தி வைத்தது,  ஏப்ரல் -14 அன்று இந்த படம் KGF-2, பீஸ்ட் படங்களுடன் ரிலீஸ் ஆகும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது.

Naga Chaitanya as Balaraju in Laal Singh Chaddha Movie

இறுதியாக இப்படம் இப்போது 11 ஆகஸ்ட் 2022 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.

Also Read | மூன்றாவது முறையாக கர்ப்பமா? கரினா கபூர் வெளியிட்ட விளக்கம்.. கணவர் சயிப் சொன்ன விஷயம்!

தொடர்புடைய இணைப்புகள்

Naga Chaitanya as Balaraju in Laal Singh Chaddha Movie

People looking for online information on Laal Singh Chaddha, Laal Singh Chaddha Movie, Naga chaitanya will find this news story useful.