Buffoon D logo top
Trigger D Logo Top
Naane Varuven M Logo Top
www.garudabazaar.com

வெங்கட் பிரபு - நாக சைதன்யா இணையும் புதிய படம்.. இணைந்த இந்தியாவின் பிரபல டாப் DOP! மாஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிக்கும் புதிய திரைப்படத்தில் பிரபல ஒளிப்பதிவாளர் இணைந்துள்ளார்.

Cinematographer S R Kathir ISC on board for Venkat Prabhu Naga Chaitanya Movie

Also Read | இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு.. மாஸ் லுக்கில் களமிறங்கிய கமல்ஹாசன்! சூப்பர் BTS

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் தேதி, சிம்பு நடிப்பில் மாநாடு திரைப்படம் வெளியாகி இருந்தது.டைம் லூப் கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தை அனைத்து தரப்பிலான மக்களுக்கு புரியும் வகையில், நேர்த்தியாக இயக்கி இருந்தார் வெங்கட் பிரபு.

மாநாடு திரைப்படமும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று, 117 கொடி ரூபாய் வசூல் செய்து பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. இதனையடுத்து, மிகவும் குறுகிய காலத்தில், நடிகர் அசோக் செல்வனை வைத்து அவர் இயக்கிய மன்மத லீலை திரைப்படமும், கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியாகியது.

Cinematographer S R Kathir ISC on board for Venkat Prabhu Naga Chaitanya Movie

அடுத்ததாக தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவுடன் அடுத்து வெங்கட் பிரபு இணையும் இருமொழி படம் குறித்த அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளிவந்தது. வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகும் 11 ஆவது திரைப்படம் இதுவாகும். அதே போல, தெலுங்கில் அவர் இயக்கும் முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. தயாரிப்பாளர் ஶ்ரீனிவாச சித்துரி, Srinivasaa Silver Screens சார்பில் தயாரிக்கும் இந்த படத்தினை பவன் குமார் வழங்குகிறார். நாகசைதன்யா தமிழில் நடிக்கும் முதல் படம் இதுவாகும்.

Cinematographer S R Kathir ISC on board for Venkat Prabhu Naga Chaitanya Movie

இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க நடிகை கீர்த்தி ஷெட்டி ஒப்பந்தமாகி உள்ளார். கடந்த ஜூன் 23 ஆம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.  தெலுங்கில் இப்பூஜையை போயபத்தி ஶ்ரீனு கிளாப் அடித்து துவக்கி வைத்தார். கேமராவை ராணா ஆன் செய்தார். தமிழில் இயக்குனர் இமயம் பாரதிராஜா கிளாப் அடித்து துவக்கி வைத்தார். நடிகர் சிவகார்த்திகேயன் கேமராவை ஆன் செய்தார்.

இப்படத்தில் இளையராஜா - யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைக்க உள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக பிரபல முன்னணி ஒளிப்பதிவாளர் S.R. கதிர் இணைந்துள்ளார்.

Cinematographer S R Kathir ISC on board for Venkat Prabhu Naga Chaitanya Movie

இவர் கற்றது தமிழ் படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர். அதனைத்தொடர்ந்து பருத்தி வீரன் (கூடுதல் ஒளிப்பதிவு), சுப்ரமணியபுரம், நாடோடிகள்,ஈசன், போராளி, நீ தானே என் பொன்வசந்தம், என்னை அறிந்தால் (கூடுதல் ஒளிப்பதிவு), கிடாரி, ராஜதந்திரம், வெற்றிவேல், லென்ஸ், அசுரவதம், கொடி வீரன், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களுக்கு அழகியலுடன் கூடிய மிரட்டலான ஒளிப்பதிவை தந்தவர்.

Also Read | இந்தியன் 2 படப்பிடிப்பு.. மேக்கப் மாஸ்க் போட்டு களமிறங்கிய காஜல் அகர்வால்!

Cinematographer S R Kathir ISC on board for Venkat Prabhu Naga Chaitanya Movie

People looking for online information on Naga chaitanya, NG22, S r kathir, Venkat Prabhu will find this news story useful.