Godavari news May 2nd

''திரைப் பிரபலங்களை தேர்தலுக்காக பயன்படுத்த வேண்டாம்''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரதமர் நரேந்திர மோடியை நடிகர் அக்ஷய் குமார் சமீபத்தில் பேட்டி எடுத்தார். இந்த பேட்டிக்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர எழுந்தது. இந்நிலையில் பிரதமர் மோடிக்கு நடிகர் பிரகாஷ்ராஜின் மனைவியும் பிரபல நடன அமைப்பாளருமான போனி வர்மா தனது ட்விட்டர் பக்கம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Prakash Raj wife Pony Varma requesting to PM Narendra Modi

அதில், பிரதமர் மோடி திரைத்துறையை விட்டு விலகியிருக்குமாறு வேண்டுகிறேன். திரைப் பிரபலங்களை தயவு செய்து தேர்தலுக்காக பயன்படுத்த வேண்டாம்.  அவர்களுக்கு இதில் விருப்பம் இல்லையென்றாலும் உங்களுக்கு அவர்கள் எப்படி மறுப்பு தெரிவிப்பார்கள்?

ஒருநாள் நீங்கள் பாலிவுட் கான்களில் ஒருவரை வைத்து உங்களை நேர்காணல் செய்யவைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. என்று தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்றத் தேர்தலில் கர்நாடகாவில் சுயேட்சை வேட்பாளராக பிரகாஷ் ராஜ் பேட்டியிட்ட நிலையில், மோடியை அவரது மனைவி விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.