லாக்டவுனில் அப்பாவுக்கு ஷேவிங் செய்து பணம் வாங்கும் பிரபல ஹீரோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்த கொரோனா வைரஸ் ஊரடங்கு பிரபலங்களை பல்வேறு துறைகளில் வல்லுநர்களாக்கியுள்ளது. சிலர் வீட்டிலேயே குறும்படங்கள் எடுப்பது, சமையல், முடி திருத்தம், இசை என தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் வெளியிடும் சமூக வலைதள பதிவுகள் அடிக்கடி வைரலாகி வருகிறது.

Popular Hero helps his father shave during Coronavirus Lockdown ft Aadhi, viral pic | லாக்டவுனில் அப்பாவுக்கு ஷேவிங் செய்யும் பிரபல ஹீரோ

அதன் ஒரு பகுதியாக நடிகர் ஆதி தனது அப்பாவிற்கு வீட்டிலேயே ஷேவிங் செய்யும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் மிகவும் நேர்த்தியாக ஷேவிங் செய்யும் ஆதிக்கு அப்பா பணம் தருகிறார். அது மிகவும் குறைவான தொகை என்று கூறி அவர் பர்ஸில் இருந்து பணம் எடுக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

'மிருகம்', 'ஈரம்', 'அரவான்', 'மரகத நாணயம்' என தமிழில் தொடர்ந்து வித்தியாசமான வேடங்கள் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்து வருகிறார். தற்போது தமிழ், தெலுங்கில் உருவாகும் 'கிளாப்' என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

Popular Hero helps his father shave during Coronavirus Lockdown ft Aadhi, viral pic | லாக்டவுனில் அப்பாவுக்கு ஷேவிங் செய்யும் பிரபல ஹீரோ

People looking for online information on Aadhi, Coronavirus lockdown will find this news story useful.