கோலாகலமாக நடைபெற்ற பிரபல ஹீரோவின் திருமணம் - வெளியான ஃபோட்டோஸ் வைரல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகராக அறியப்படும் நிகில் சித்தார்த்தாவிற்கும், டாக்டர் பல்லவி வர்மாவிற்கும் இன்று (14/05/2020) கோலகலமாக திருமணம் நடைபெற்றது. திருமண நிகழ்வானது முறையான அனுமதி பெற்று அவர் வீட்டிலேயே மிக முக்கிய உறவினர்களைக் கொண்டு இன்று காலை 6.31 மணிக்கு நடைபெற்றது.

Actor Nikhil Siddhartha got married to Pallavi Varma during coronavirus Lockdown | கொரோனா வைரஸ் லாக்டவுனில் மிகவும் எளிமையாக நடைபெற்ற பிரபல ஹீர

திருமண நிகழ்வில் கலந்து கொள்பவர்களின் பாதுகாப்புக்காக மாஸ்க் வழங்குவது, சானிடைசர் வசதி என மிகவும் பாதுகாப்பாக நடைபெற்றது. ரசிகர்கள் யாரும் திருமணத்தை நேரில் காணாத நிலையில், தற்போது திருமண புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் பிரபலங்கள், ரசிகர்கள் என ஒரு சேர அவருக்கு சமூக வலைதளங்கள் மூலமாக வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் நிகில் சித்தார்த்தாவிற்கும், பல்லவி வர்மாவிற்கும் கடந்த பிப்ரவரி மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மேலும் திருமணம் கடந்த ஏப்ரல் மாதம் திட்டமிடப்பட்டிருந்தது. இதனைடையே கொரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக திருமணம் தள்ளிவைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

நடிகர் நிகில் 'ஹேப்பி டேஸ்' திரைப்படம் மூலம் தெலுங்கு திரையுலகில் அடியெடுத்து வைத்தார். அந்த திரைப்படம் 'இனிது இனிது' என்ற பெயரில் தமிழில் ரீமேக்கானது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து 'நிகில்', 'சுவாமி  ரா ரா', 'கார்த்திகேயா' உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.

Entertainment sub editor